சென்னை, ஜூன்.20- பா.ம.க.வில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு தி.மு.க.வின் தலையீடு என்று அன்புமணி ராமதாஸ் சொல்வது அப்பட்டமான பொய் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
கருத்து மோதல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்த சூழலில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாவட்ட வாரியாக நடை பெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் பா.ம.க.கவுரவ தலை வரும், சட்டமன்ற உறுப் பினருமான ஜி.கே. மணி, சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று (19.6.2025) சென்னை வந்தார். அபிராமபுரம் இல்லத்திற்கு வந்த அவரி டம் செய்தியாளர்கள் அடுக்கடுக்கான கேள்வி களை எழுப்பினர்.
அவரிடம் கேட்ட கேள் விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
அப்பட்டமான பொய்
கேள்வி:- தந்தையிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். கட்டளையிட்டால் அதை செயல்படுத்தவும் தயாராக இருப்பதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறுகிறாரே?.
பதில்:- இதற்கான முடிவு, போக… போக… தெரியும். (என்று தொடங் கும் பாடலை பாடினார்).
கேள்வி:- பா.ம.க.வில் நிலவும் பிரச்சினையில் தி.மு.க. தலையிடுவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் விமர்சிக்கிறாரே?. தி.மு.க. தலையிடுகிறதா?
பதில்:- பா.ம.க.வில் ஏற்பட்டு உள்ள குழப்பத் துக்கு தி.மு.க.தான் காரணம் என்று அன்புமணி ராம தாஸ் கூறியிருப்பது அப்பட்டமான பொய். பா.ம.க.வில் தி.மு.க. தலையீடு என்பது கடைந் தெடுத்த பொய்’.
இவ்வாறு டாக்டர் ராம தாஸ் பேட்டி அளித்தார்.