கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

20.6.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மகாராட்டிரா பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம்  வகுப்பு வரை ஹிந்தி மொழி கட்டாயம் என மீண்டும் அமுல்படுத்துவதற்கு, அகில பாரத மராத்தி மண்டல் அமைப்பு கடும் எதிர்ப்பு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கைப்பற்றிய சம்பவத்தில், உச்சநீதிமன்றம் நியமித்த குழு, நீதிபதி யஷ்வந்த் சர்மா, அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக அறிக்கை அளித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகாரில் 85 சதவீத இடஒதுக்கீடு மற்றும் அதை ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பது அவசியம்; நீதித்துறை விதித்த செயற்கையான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும், ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி.

* ராஜ் பவனில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில் காவிக் கொடியுடன் பாரத மாதாவின் உருவப்படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள கல்வி அமைச்சர் வி. சிவன் குட்டி வெளிநடப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கீழடி கண்டுபிடிப்புகளை மறைக்க பாஜக அரசு முயற்சிப்பது தமிழர் பெருமையின் மீதான அதன் வெறுப்பைக் காட்டுகிறது. நம்பகமான ஆதாரங்கள் இல்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை ஊக்குவிப்பதன் மூலம் திராவிட கலாச்சாரத்தின் சின்னத்தை அழிக்க பாஜக விரும்புகிறது, அதே நேரத்தில் தமிழ் கலாச்சாரத்தின் நிரூபிக்கப்பட்ட தொன்மையை நிராகரிக்கிறது என திமுக தொண்டர் களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம்.

தி டெலிகிராப்:

* ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு மொழியியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு. ஷாவின் கருத்துக்களை “உணர்ச்சியற்றது” மற்றும் “அறியாமையால் பிறந்தது” என்று கடுமையாக விமர்சனம். மேலும் ஹிந்திக்கான அரசாங்கத்தின் கூறப்படும் பிரச்சாரம் “இந்தியாவின் நீண்ட கால மொழியியல் பன்முகத் தன்மையை அழிக்கும்” என்றும் கருத்து.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘புல்டோசர் நீதி’க்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது: நிர்வாகி நீதிபதி, நடுவர், மரண தண்டனை நிறைவேற்றுபவராக இருக்க முடியாது: அரசமைப்பு சட்டத்தின் இட ஒதுக்கீடு பிரிவுகளின் அடிப்படையில் தான் தலைமை நீதிபதியாக வர வாய்ப்பு கிடைத்தது என இத்தாலியில் நடைபெற்ற மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேச்சு.

– குடந்தை கருணா

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *