இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் அவலம்:

2 Min Read

தீபாவளிக்காக அயோத்தியில் 22.5 லட்சம் அகல் விளக்குகளாம்!

எண்ணெய்யைப் பாட்டிலில் பிடித்துச் சென்ற ஏழை பாழைகள்!!

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் படை!

இந்தியா

லக்னோ, நவ.12 அயோத்தியில் 22.5 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்வில் உத்தரப் பிரதேசத்தின் உண்மை முகம் அம்பலமாகி இருக்கிறது. என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி உத்தரப்பிரதேசத்தில் நடை பெற்று வருகிறது. இன்று (12.11.2023) தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதற்கு முந்தைய நாளான நேற்று (11.11.2023) கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி அயோத்தியில் 24 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி அயோத்தியில் தீபாவளியை முன்னிட்டு நேற்று (11.11.2023) தீபோத்சவ் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

இந்தியா

இந்த நிகழ்ச்சியில் அயோத்தி முழுவதும் சுமார் 24 லட்சம் விளக்குகளை ஏற்றுவதற்கு 25 ஆயிரம் தன்னார்வலர்கள் வரவழைக்கப் பட்டனர். விளக்குகளின் எண்ணிக்கையை கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த தீப உத்சவ நிகழ்வின் முக்கிய பகுதியாக ‘ஷோபா யாத்திரை’யை அம்மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் கொடிய சைத்துத் தொடங்கி வைத்தார். ராமா யணத்தில் உள்ள ராமரின் கதைகள் உள்பட பல்வேறு சமூக ஆன்மீகக் கருத்துகளைக் கொண்ட 18 அலங்கார அணிவகுப்பு ஊர் வலமும் நடத்தப்பட்டதாம்.

அயோத்தி உதயா சதுக்கத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக ராம் கதா பூங்காவில் முடிந்தது. இதில் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்களாம். ராமர், அவரது மனைவி சீதை மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் புஷ்பக விமானத்தில் 14 ஆண்டுகால வன வாசத்துக்குப் பிறகு அயோத்தி திரும்பியதை சித்தரிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட தேர் இழுத்து வரப்பட்டதாம்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல், அமைச்சர் கள் ஜெய்வீர் சிங், ராகேஷ் சச்சன், தலை மைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச் சியில் 22.5 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டதாம். ட்ரோன் கேமராவில் பதிவான இதன் காட்சிகள் பலரை ரசிக்க வைத்தனவாம். அதே நேரம் அந்த சாதனை நிகழ்வின்போது கைப்பேசியில் எடுக்கப்பட்ட காட்சிகள் உத்தரப்பிரதேசத்தின் உண்மை முகத்தைத் தோலுரித்துக்காட்டி உள்ளன.

ஆம், சாதனைக்காக ஏற்றப்பட்டு அழகாக எரிந்துகொண்டு இருக்கும் அகல் விளக்குகளில் ஊற்றப்பட்டு உள்ள எண்ணெய்யை ஏழைக் குழந்தைகள் பாட்டிலில் ஊற்றிச் செல்லும் காட்சி அது. அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அந்த குழந்தைகளை எண்ணெய் எடுக்கக் கூடாது என்று எச்சரித்தனர். தீபாவளிக்கு முதல் நாள் அரசாங்கம் 22.5 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைக் கும் அதே நேரம், அதை கண்டு ரசிக்கக் கூட நேரமின்றி அதில் உள்ள எண்ணெய்யை எடுத்து வாழ்வாதாரத்தை நடத்தும் நிலைக்கு ஏழைக் குழந்தைகள் தள்ளப்பட்டு உள்ளதாக பலர் கருத்திட்டு வருகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *