சேலம் மாவட்டத் தலைவர் வீரமணிராஜ் தனது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன். (சென்னை, 18.6.2025)
‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்’’ என்று வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் கனவுத் திட்டமான திருச்சி – சிறுகனூரில் மிகப் பிரமாண்டமாக அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு தஞ்சை – மாரியம்மன் கோவில் சி.எஸ். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், பெரியார் பற்றாளருமான பா.சிவானந்தம் அவர்கள் ரூ.1,00,000/- (ஒரு இலட்சத்திற்கான) காசோலையினை தஞ்சை மாவட்டக் காப்பாளர், மு.அய்யனாரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டத் துணைத் தலைவர் பா. நரேந்திரன், மாநகரச் செயலாளர் இரா. வீரக்குமார்.