அய்தராபாத், ஜூன் 22 தெலங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சயம் பாபுராவ், தனது மகனின் திருமணத்திற்கும், தனக்கு வீடு கட்டுவதற்கும் தனது நாடாளு மன்ற தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்திக் கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள் ளார். பாஜக செயல்வீரர்கள் கூட் டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு பேசியிருக்கும் சயம் பாபுராவ், தனது தொகுதி வளர்ச்சிநிதி எதற்கு பயன்படுத்தப் பட்டது? என்று பகிரங்கமாக உண்மையைப் போட்டு உடைத் துள்ளார்.
“இன்று, வீடு இல்லை என்றால், மதிப்பு இல்லை, எனவே வீடு கட்டுவதற்காக எனது தொகுதி வளர்ச்சி நிதியைப் பயன்படுத்தி னேன். இதை எந்தத் தலைவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நான் ஒப்புக்கொள்கிறேன். தவிர, என் மகன் திருமணத்திற்கு தேவைப் பட்ட பணத்துக்கும் நாடாளுமன்ற வளர்ச்சிப்பணிகளுக்கான நிதியைப் பயன்படுத்தினேன். இதற்கு முன்னிருந்தவர்கள் முழு வளர்ச்சி நிதியையும் ஏப்பம் விட்டார்கள். ஆனால், நான் அப்படியல்ல; சிறியபகுதியைத்தான் எடுத்துக் கொண்டுள்ளேன்” என்று பேசியுள்ளார்.
இதுதொடர்பான காட்சிப் பதிவு சமூகவலைதளங் களில் வெளியான நிலையில், அதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக இருக்கவேண்டிய ஒருவர், தொகுதி மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவ தற்காக ஒதுக்கப்பட்ட நிதியை, தன் விருப்பத்திற்கு தனது சொந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தியிருப்பதை ஏற்க முடி யாது; அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக் கைகள் எழுந்துள்ளன. சயம் பாபு ராவ், பழங்குடியின அமைப்பில் இணைந்திருந்தார்.
ஆனால் இவர் பாஜகவில் இணைந்து ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வை விதைத் ததால் பழங்குடியின நலனுக்கான அமைப்பிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.
பாஜகவில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவர்தொகுதி வளர்ச்சி நிதியைப் பயன்படுத்தி வீடு கட்டிக் கொண்டதாகவும், மகனுக்கு திருமணம் செய்து வைத்த தாகவும், மக்கள் மீது கொஞ்சமும் அச்சமில்லாமல் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.