லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 183ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

viduthalai
1 Min Read

இங்கிலாந்து நாட்டின்  ஆக்ஸ்போர்ட்டில் உலக தமிழர் வரலாற்று மய்யம் வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் 183ஆவது திருவள்ளுவர் சிலையினை ஆக்ஸ்போர்ட் மாநகரத்தின் கவுன்சிலர்கள்  ஸ் ரீபன்  வூட், சூசான் அன்ட் – மாஸ்கெல்  கெலன், முன்னிலையில் விஜிபி உலக தமிழ் சங்கத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

அருகில் க்ளைடன்  மேயர் அப்புசாமி, மோரிசியஸ் மேனாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன்,  லண்டன் சிவா பிள்ளை, ஆஸ்திரேலியா எழுத்தாளர் சந்திரிகா சுப்பிரமணி, மல்லை தமிழ் சங்கத்தின் தலைவர் மல்லை சத்யா, துபாய் மொய்தீன், ஆலந்தூர் மோகனரங்கன் அறக் கட்டளையின் பாட்டழகன், முனைவர் உலகநாயகி பழனி மற்றும் 20 நாடுகளில் இருந்து பல்வேறு கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.

விஜிபி திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து வாழ்த்து செய்தி அனுப்பினார்.

லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 183ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *