கும்மிடிப்பூண்டி,ஜூன்22 – கும்மிடிப்பூண்டி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 04-.06.-2023 அன்று கும்மிடிப்பூண்டி ஏவிஎஸ் திருமண மண்டபத்தில் மாவட்டத்தலைவர் புழல் த.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப.சக்கரவர்த்தி கடவுள் மறுப்பு கூறி கூட்டத்தை தொடங்கி வைத் தார். கருத்துரை வழங்கிய தலைமைக் கழக அமைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர் செல்வம், ஈரோடு பொதுக்குழுவில் எடுக்கப் பட்ட தீர்மானங்கள் மற்றும் சென்னை பெரியார் திடலில் ஆசிரியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்ட தீர்மானங்களை பற்றி விளக்கி பேசினார். குறிப்பாக ஒன்றியங்கள் தோறும் வைக்கம் நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம் நடத்துவது, மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது, ஒவ்வொரு கழக உறுப்பினர் இல்லத்திலும் கழகக் கொடி ஏற்றவது என பல கருத்துகளை விளக்கி பேசினார். பிறகு தோழர்கள் அவரவர் கருத்துரைக்கு பின் மாவட்ட செயலாளர் ஜெ.பாஸ்கரன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், ஒடிசா தொடர்வண்டி விபத்தில் உயிரிந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.
மாவட்ட அனைத்து ஒன்றியங்களிலும் வைக் கம் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும், மாவட் டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது எனவும், கழகக் கொடி இல்லாத பகுதிகள் இல்லை என்று கூறுமளவில் கழகக் கொடிகளை ஏற்றுவது எனவும், இயக்க ஏடுகளுக்கு சந்தா வழங்குவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.