சூலூர், ஜூன் 22 – ஒன்றிய அரசின் நெருக்கடி தொடர்பாக, ‘நாங்கள் இதற்கு எல்லாம் பயப்பட மாட் டோம்’ என முதலமைச்சர் முன் மொழிந்ததை நான் வழிமொழி கிறேன் என திரைக்கலைஞர் சத்ய ராஜ் தெரிவித்தார். கோவை சூலூரில் சத்யராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடிகர் விஜய் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரி யாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கியது நல்ல விஷயம். அவர் பெரியார், அம்பேத்கர், காமராஜரை முன்னு தாரணமாக வைத்து பேசியது ரொம்ப நல்ல விஷயம். இதை வரவேற்கிறோம். எனது மகள் திவ் யாவிற்கு அரசியல் ஆர்வம் இருக் கிறது. அவர் பகுத்தறிவு உள்ள, மூடநம்பிக்கை இல்லாத, சமூக நீதி சார்ந்த அரசியலை முன்னெடுக்க விரும்புகிறார்.
ஒன்றிய அரசின் நெருக்கடி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே பதில் சொல்லி விட்டார்.
நாங்கள் இதற்கு எல்லாம் பயப் பட மாட்டோம் என முதலமைச்சர் முன்மொழிந்ததை நான் வழி மொழிகிறேன். இவ்வாறு திரைக் கலைஞர் சத்யராஜ் கூறினார்.