கீழடி – இருட்டடிப்பு: இனவுணர்வாளர்களே, திரண்டு வாரீர்! வாரீர்!!– கருஞ்சட்டை –

2 Min Read

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1889  முதல் 1905 வரை ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா என்பவர் அகழாய்வு மேற்கொண்டார். 4000–த்திற்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன.

இரும்பால் செய்யப்பட்ட ஆயுதங்கள், பாத்திரங்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், தங்க நகைகள், பல்வேறு வகையான மணிகள், மாவு அரைக்கும் கல் இயந்திரங்கள், விளக்குகள் கண்டெ டுக்கப்பட்டன.

2004–2005 இல் மீண்டும் அகழாய்வு செய்யப்பட்டது.

3,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகமாக இது கருதப்படுகிறது. தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனாலும், அகழாய்வு அறிக்கை வெளி யிடப்படவில்லை. 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர், 2021 ஆம் ஆண்டுதான் வெளியிடப்பட்டது.

17 ஆண்டுகள் அதற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? நீதிமன்றம் உத்த ரவு வரும்வரை ஆதிச்சநல்லூர் அறிக்கையைப் பூட்டி வைத்தது ஏன்?

சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று சர்.ஜான் மார்ஷல் போன்றவர்கள் தொல்லியல் ஆய்வு செய்து நிரூபித்தனர். அய்ராவதம் மகாதேவன் போன்றவர்களும் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில், மொகஞ்சதாரோ என்ற பெயரில் இந்தி திரைப்படம் எடுக்கப்பட்டது. திராவிட நாகரிகம் என்பதை முற்றிலும் மறைத்துவிட்டு, வேத காலத்தில் உச்சத்தில் இருந்த நகரமென்று நம்ப வைத்தனர். விமானம் என்பது வேத காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என்று கூறும் ‘ஹவாய்காதா’ என்ற திரைப்படமும் எடுக்கப்பட்டது.

1997 ஆம் ஆண்டு பி.ஜே.பி. முதன்முதலாக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட நாகரிகங்களை முற்றிலும் சிதைக்கும் வேலையை ஆரம்பித்தனர். 1999 ஆம் ஆண்டு வாஜ்பேயி பிரதமராக இருந்தார். மகாராட்டிரத்தில் சிவசேனா – பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி நடந்த காலம் அது.

இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சிய கமான பிரின்ஸ் வேல்ஸ் மியூசியத்தில் (தற்போது சத்ரபதி சிவாஜி என்று பெயர் மாற்றம்) வைக்கப்பட்டு இருந்த சிந்து சமவெளிப் பொருட்கள் அடங்கிய பகுதியில், திராவிட நாகரிகத்தின் எச்சங்கள் என்ற பெயரை அகற்றிவிட்டு, அடையாளம் தெரியாத (Unknown Civilizations) மக்கள் வாழ்ந்த இடம் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டது ஏன்?

காரணம் ஒன்றே ஒன்றுதான். திராவிடர் நாகரிகங்களை, தமிழர் தம் தொன்மையைத் திட்டமிட்டு மறைக்கும் நோக்கம் மட்டுமே!

கீழடி ஆய்வையும் அந்தக் கண்ணோட் டத்தில்தான்  மூடி மறைக்கின்றனர்.

நாம் விழித்துக் கொண்டு இருக்கிறோமா, தூங்குகிறோமா என்று ஆர்.எஸ்.எஸ். வகை யறாக்கள் சோதித்துப் பார்க்கின்றனர்.

நாம் விழிப்புடன் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த,

வரும் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை சைதை கலைஞர் பொன்விழா வளைவு அருகில், எழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று
இன உரிமைச் சங்கநாதம் செய்கின்றனர்.

கழகத் தோழர்களே, தமிழின உணர்வா ளர்களே வாரீர்! வாரீர்!!

அணி திரண்டு வாரீர்!!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *