11 ஆண்டுகள் கடந்துவிட்ட மோடியின் ஒன்றிய அரசு தனது சாதனைகள் குறித்து தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் செய்கிறது. இதைப் படிக்கும் தமிழர்களுக்கு என்ன பொருள் என்றே புரியாது. இதை பார்க்கும் ஹிந்திக்காரனுக்கு என்ன எழுதி இருக்கிறது என்றே தெரியாது.
இப்படி யாருக்குமே புரியாத வகையில் ஹிந்தித் திணிப்பை செய்யும் ஒரே கோஷ்டி பாஜகதான்.
மோடியின் பிரான்ஸ் பயணத்தின்போது, விமான நிலையத்தில் இருந்து மோடி இறங்கிய பிறகு, அவருக்கு பூரணகும்ப வரவேற்பு கொடுக்க… பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூரைச் சேர்ந்த பார்ப்பனரைத்தான் பாரீஸ் நகருக்கு இந்திய தூதரகம் அழைத்துச் சென்றுள்ளது.