புதுச்சேரியில் ஆண்டுதோறும் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு பிளஸ் 2 மதிப் பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அகில இந்திய நர்சிங் கவுன்சில் புதிய விதி முறைப்படி நுழைவுத் தேர்வு நடத்தி தான் மாணவர் களை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந் தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காலங்களை போல் இந்த ஆண்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப் படையில் மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் அரசை வலி யுறுத்தி இருந்தனர். காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பிலும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாண வர்கள் சேர்க்கை நடைபெறும் என்று முதலமைச்சரும் அறிவித்திருந்தார் ஆனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு சுகாதாரத்துறை நுழைவுத் தேர்வு அடிப்படை யில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் , இந்தத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.
புதுச்சேரி முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி நுழைவுத் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு அளிக்கும்படி அகில இந்திய நர்சிங் கவுன்சிலுக்கு சுகாதாரத் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது அதை ஏற்றுக் கொண்ட அகில இந்திய நர்சிங் கவுன்சில் புதுவை மாநிலத்திற்கு இந்த ஆண்டு மட்டும் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த ஆண்டு பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவித்துள்ள முதலமைச்சருக்கு காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற 10 மாவட் டங்கள் கலந்து கொண்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆலோ சனையின் பேரில் புதுச்சேரியில் நர்சிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறை வேற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழகம் சார்பிலும் , காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகம் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள் கிறோம்.
ஒரு ஆண்டு விலக்கு என்பதை விட மற்ற மாநிலங்கள் ஏற்கும் வரை புதுச்சேரி மாநிலமும் நர்சிங் படிப்பிற்கான நுழைவு தேர்வை ஏற்கக் கூடாது என காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழை கட்டாய மாக்க வேண்டும்.மேலும் தமிழ் வழி கல்வியிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
ஓ.பி.சி. மற்றும் மாநில இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருக்கும் மருத்துவப் படிப்பிற்கான பொது கலந் தாய்வு நுழைவுத் தேர்வு முறையையும் ரத்து செய்ய வேண்டும்.
பொன். பன்னீர்செல்வம்
மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்
காரைக்கால்.