செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதி மேடவாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகங்களையும், 15 பயனாளிகளுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் அவர்கள் தலைமையில் மருத்துவம் மற்றும் மககள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 22.06.2023 அன்று வழங்கினார். உடன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த ரமேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை துணை இயக்குநர் மரு.பரணிதரன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.பாபு கணேஷ், புனித தோமையார் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்.எஸ்.சங்கீதா பாரதிராஜன், மேடவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் சிவபூஷனம் ரவி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். (22.6.2023)