மதுரை அரங்கு நிறைந்த நிகழ்வான புரட்சிக் கவிஞர் விழா

Viduthalai
2 Min Read

மதுரை, ஜூன் 10- மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை சிந்தனை மேடை இணைந்து நடத்திய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா 25-05-2025 ஞாயிறு மாலை 4:30 மணிக்கு தொடங்கியது தொடக்க நிகழ்ச்சியாக பள்ளி மாணவர் மாணவர்களுக்கான புரட்சிக் கவிஞர் கவிதை ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது .மதுரை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ,மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

புரட்சிக்கவிஞர் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டியை போட்டியை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம் ஒருங்கிணைத்து மாணவர்களை அழைத்துத் தொடங்கி வைத்தார்.அவருக்குத்துணையாக பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.பால்ராஜ், செயலாளர் வீர.பழனிவேல்ராஜன், ஆசிரியர் அழகு மீனாள் ஆகியோர் இணைந்து நடுவராக துணை நின்றனர்.மறுமலர்ச்சி தொழிலாளரணி இணைப் பொதுச்செயலாளர் மகபூப்ஜான் எழுத்துப் பணியை ஏற்று நிகழ்ச்சியில் பங்கேற்றார். 21 மாணவ, மாணவிகள் புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகளை சிறப்பான நடை,உடல்மொழி, உச்சரிப்புடன் ஒப்பித்து முடித்தனர்.மாணவிகள் பெற்றோர்கள் என அரங்கு நிzறைந்து இருந்தது.அனைவருக்கும் இனிப்பு, காரம், தேனீர் வழங்கப்பட்டது.

தொடர்ந்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பாவலர் சுப.முருகானந்தம் தலைமையில் தொடங்கியது.புரட்சிக்கவிஞர் பாடல்கள் எப்படி இன்றைக்கும் கூட உணர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது என்பதைச்சுட்டிக் காட்டி தலைமையுரையாற்றினார். மாவட்டச் செயலாளர். வீர.பழனிவேல்ராஜன் அனைவரையும் வரவேற்றார்.தலைமைச்செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் புரட்சிக்கவிஞரின் பாடல் களை இசையுடன் பாடினார்.

தொடர்ந்து மாணவ மாணவிகளைப் பாராட்டியும்,புரட்சிக்கவிஞர் கவிதைகள் பற்றியும் மாவட்ட கழகத் தலைவர் அ.முருகானந்தம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.பால்ராஜ், சிறைத்துறை ஜெயிலர் கலையரசன், இயக்கத் தமிழர் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் இராம. வைரமுத்து ஆகியோர் உரையாற்றினர். கழக சொற்பொழிவாளர் அ.வேங்கைமாறன் மாணவர்களுக்கான வழிகாட்டும் ஊக்கவுரையை ஈர்ப்புடன் வழங்கினார்.

நிறைவாக. பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு விழாப்பேருரை ஆற்றினார்.அவர் தனது உரையில்  கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரைகளைக் கேட்டால் அதில் புரட்சிக்கவிஞரின் கவிதைகளும், திருக்குறளும் நிறையப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.கலைஞர் மற்றும் திராவிட இயக்கத்தலைவர்களின் உரைகளில் எல்லாம் நாம் இதைப் பார்க்கலாம்.ஆகவே மாணவ மாணவிகளே புரட்சிக்கவிஞரின் கவிதைகளையும்,திருக்குறளையும் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் மனப்பாடம் செய்யுங்கள்.அது எல்லா மேடைகளிலும் உங்களுக்கு கைகொடுக்கும் என்று குறிப்பிட்டு பரிசு பெற்றவர்கள்,பங்கு பெற்றவர்கள் அனை வரையும் பாராட்டி உரையாற்றினார்.

2025 அரசு பொதுத்தேர்வில் பத்தாவது மற்றும் +2 தேர்வில் நல்ல மதிப்பெண்ணோடு வெற்றி பெற்ற க.சீர்த்தி, சு.திவ்யதர்ஷினி ,த.அன்புக்கரசி, மா.ஷர்மிளா, வை.கவின்மதி,ஈ. தெய்வசன் பெரியார் ஆகியோருக்கு பயனாடைகள் அணிவிக்கப்பட்டு பாராட்டுக்கேடயமும் வழங்கப்பட்டது. வழக்குரைஞர் இராம.வைரமுத்துவின் தாயாரும் ஒய்வு பெற்ற ஆசிரியருமான இராம.மாரியம்மாள் அவர்களைப் பாராட்டிப் பயனாடை அணிவிக்கப்பட்டது.,மாணவ,மாணவிகள் கவிதை ஒப்பித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்ற த.யாழினி தங்கப்பாண்டிக்கு ரூ1000மும், 2வது பரிசு பெற்ற கு.ச.பாரதிக்கு .ரூ500ம், 3வது பரிசுபெற்ற கா.ஜெயசிறீக்கு 250ம்,ஆறுதல் பரிசு பெற்ற இரா.பிரதிபா,ச.ஹரிஸ்மா ஆகியோருக்கு தலா ரூ 200ம் பரிசாக அளிக்கப்பட்டது.பரிசுகளை கழகப் பொறுப்பாளர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.நிறைவாக பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பேரா. முனைவர் சி.மகேந்திரன் நன்றி கூறினார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *