பீகார் சட்டமன்றத் தேர்தல் முறைகேடுக்குப் பிஜேபி தயார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூன் 8 –மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலை போன்று, பீகார் தேர்தலிலும் தில்லுமுல்லுகளை அரங்கேற்ற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி அவர்கள் வெளி யிட்டுள்ளசமூக வலைதளப்பதிவில், 2024இல் நடைபெற்ற மகாராட்டிரா சட்டமன்றத்தேர்தலில் ஜனநாய கத்தை மோசடி செய்து பா.ஜ.க. வெற்றி பெற்றதை சுட்டிக் காட்டிள்ளார். அதன்படி, தேர்தல் ஆணை யத்தை நியமிப்பதற்கான குழுவைத் திரட்டுதல், போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தல்,வாக்காளர் வாக்குப் பதிவை உயர்த்துதல், பா.ஜ.க. வெற்றி பெற வேண்டிய பகுதிகளில் போலி வாக்காளர்களைச் சேர்த்தல் அதன் பிறகு அதற்கான ஆதாரங்களை மறைத் தல் போன்றவற்றை குறிப்பிட் டுள்ளார்.

நம்பத் தன்மை சீர்குலையும்

மேட்ச் பிக்சிங் மூலம் ஏமாற்று பவர்கள் விளையாட்டுகளை வெல்லலாம். ஆனால், தேர்தல் ஆணையத்தின் நம்பத்தன்மையை சீர்குலைத்து தேர்தலில் வெற்றி பெறுவது பொதுமக்களின் நம்பிக் கையை அழிக்கும் செயல் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இதுபோன்ற ஆதாரங்களுடன் வெளியாகும் நடவடிக்கைகளை பார்த்து பொதுமக்கள் எதிர்வரும் காலங்களில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். எனவே, மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலைபோன்று, பீகார் தேர்த லிலும் தில்லு முல்லுகளை அரங்கேற்ற பா.ஜ.க. திட்டமிட்டுள்ள தாகவும், மேட்ச் பிக்சிங் தேர்தல்கள் எந்த ஒரு ஜனநாயகத்திற்கும் ஒரு விஷம்போன்றது என்றும் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப் பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *