பிஜேபி ஆளும் குஜராத்தில் மது விலக்கின் லட்சணம் 82 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்!

Viduthalai
1 Min Read

அகமதாபாத், ஜூன் 8 குஜராத்தில் மது அருந்துவது தடை செய்யப்பட்டது. ஆனால், அங்கு மதுவின் பயன்பாடு குறித்து அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டில், குஜராத்தில் ஒவ்வொரு நான்கு வினாடிகளுக்கும் ஒரு இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது என்று காவல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, குஜராத் மாநிலத்தில் 144 கோடி ரூபாய் மதிப்புள்ள 82,00,000 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அகமதாபாத் நகரம், அகமதாபாத் கிராமப்புறம் மற்றும் மேற்கு ரயில்வே அகமதாபாத் பகுதிகளில் 4,38,047 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அகமதாபாத் நகரில் மட்டும் 2,139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்போது 3.06 லட்சம் IMFL பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், 1.58 லிட்டர் உள்ளூர் மது பறிமுதல் தொடர்பாக 7,796 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வடோதரா கிராமப்புற பகுதியில் 9.8 கோடி ரூபாய் மதிப்புள்ள IMFL மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரிகள் மற்றும் கிடங்குகளில் உள்ள மறைவான இடங்களில் இருந்து இந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வாவ்நகரில் 8.7 கோடி ரூபாய் மதிப்புள்ள IMFL பறிமுதல் செய்யப்பட்டது.

நீர் தொட்டிகள் மற்றும் காய்கறி மறைவுகளில் இந்த மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. நவசாரியிலும் அதிக அளவில் மது பறிமுதல் செய்யப்பட்டது. மதுவிலக்கு குஜராத்தில் இவ்வளவு மது பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *