தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை

Viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 7 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், 36 அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சென்னை கலைஞர் நகர் இ.எஸ்.அய்., மருத்துவக் கல்லுாரிகளில், 5,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதில், 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும், சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், 3,450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலையில், 550 இடங்களும் உள்ளன. இதன்படி, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், 9,200 எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன.

பல் மருத்துவத்திற்கான, பி.டி.எஸ்., இடங்களை பொறுத்தவரை, அரசு மருத்துவக் கல்லூரிகளில், 250 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், 1,900 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு, https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று (6.6.2025) துவங்கியது. இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக துவங்கப் பட்ட 10 மருத்துவக் கல்லுாரிகளில், தலா 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மட்டுமே உள்ளன.

அதனால், ஒவ்வொரு கல்லுாரிக்கும் கூடுதலாக 50 என, 500 எம்.பி.பி.எஸ்., இடங்களை ஏற்படுத்தும்படி, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி.,யிடம், தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம், இந்த ஆண்டும் விண்ணப்பித்திருந்தது.

மேலும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனும், டில்லி சென்று வலியுறுத்தி இருந்தார். ஆனால், பேராசிரியர்கள் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு குறைபாடு காரணமாக, ஏற்ெகனவே, 35 மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து, என்.எம்.சி., கடிதம் எழுதியிருந்தது. இதற்கு, தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், இந்த குறைபாடுகள் இருப்பதால், கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என, என்.எம்.சி., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி கூறியதாவது: மருத்துவக் கல்லுாரிகளுக்கு என்.எம்.சி., வழங்கிய நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதை என்.எம்.சி.,யும் ஏற்று உள்ளது.

அதேநேரம், கூடுதலாக, 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, கடந்த ஆண்டை போலவே இப்போதும் விண்ணப்பித்து இருந்தோம். அதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, ஏற்ெகனவே இருக்கும் இடங்களுக்கு தான், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

முதுகலை கணினி ஆசிரியர் வேலை கல்வித் தகுதி: அரசாணை

அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை கணினி ஆசிரியர் வேலை கல்வித் தகுதியை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎட் படித்திருக்க வேண்டும், அல்லது எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் எம்எஸ்சியுடன் ஒருங்கிணைந்த பிஎஸ்சி பிஎட் படிப்பு, அல்லது பிஏ பிஎட் படித்திருக்க வேண்டும். இளங்கலை பட்டமும், முதுகலை பட்டமும் ஒரே பாடத்தில் படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *