உலக உணவு பாதுகாப்பு நாள் இன்று (ஜூன் 7, 2025)

Viduthalai
1 Min Read

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பத்தில் ஒருவர் அசுத்தமான உணவால் நோய்வாய்ப்படுகிறார். அசுத்தமான உணவை உண்பதால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன. தூய்மையற்ற உணவு மூலம் பரவும் நோய்கள் 40 சதவீதமாகும். பெரும்பாலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

உலக உணவு பாதுகாப்பு நாளானது உணவு பாதுகாப்பு சம்பவங்கள் குறித்து கவனத்தை ஈர்க்கிறது. உணவுப் பாதுகாப்புச் சம்பவங்கள் எவ்வளவு எளிதானதாகவோ அல்லது கடுமையானதாகவோ இருந்தாலும் அதற்குத் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உணவுப் பாதுகாப்பு சம்பவங்கள் என்பது உணவு உட்கொள்ளலுடன் தொடர்புடையது. சாத்தியமான  உறு திப்படுத்தப்பட்ட சுகாதார உணவுக்கான அபாயம் உள்ள சூழ்நிலைகளை கண்டறிய வேண்டும். உதாரணமாக, விபத்துக்கள், போதிய கட்டுப்பாடுகள், உணவு மோசடி, இயற்கை நிகழ்வுகள் போன்றவற்றால் பாதுகாப்பான உணவுக்கான நெருக்கடி சம்பவம் நிகழலாம்.

உணவுப் பாதுகாப்பு சம்பவங்களை நிர்வகிப்பதற்குத் தயாராக இருப்பதற்கு, கொள்கை வகுப்பாளர்கள், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் உணவு வணிக நிர்வாகிகள் ஆகியோரின் அர்ப்பணிப்பு முயற்சிகள் தேவைப்படும். அதே வேளையில், நுகர்வோர்களும் செயலில் பங்கு வகிக்க முடியும். உடலுக்கும், அதன் உள்ளிருக்கும் உயிருக்கும் ஆரோக்கியமான உணவு என்பது அவசியமான ஒன்றாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *