‘அட ராமா!’ ராமன் கோயில் பிரசாதத்தின் பெயரில் 6 லட்சம் பேரிடம் ரூ. 3.85 கோடி மோசடி

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூன் 6 அயோத்தி ராமர் கோயி​லில் பிராண பிர​திஷ்டை பிர​சாதம் எனக் கூறி 6 லட்​சம் பேரிடம் மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது.

ராமன் கோவில்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி​யில் ராமன் கோயில் ‘பிராண பிரதிஷ்டை’ செய்த பிறகு சுவாமி பிர​சாதம் கிடைக்​க​வில்லை என அயோத்தி காவல் நிலையங்களுக்குப் புகார்​கள் வரத் தொடங்​கின. அந்த புகார்​கள் மாநில சைபர் கிரைம் பிரி​விடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. சைபர் கிரைம் பிரிவு நடத்​திய விசா​ரணை​யில், போலி இணை​யதளம் உரு​வாக்​கி, ராமன் கோயில் பிர​சாதம் அனுப்​புவ​தாக விளம்​பரப்​படுத்​தப்​பட்​டது தெரியவந்​தது.

6 லட்சம் பேரிடம் மோசடி

காஜி​யா​பாத்தை சேர்ந்த ஆசிஷ் என்​பவர் இந்த மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளார். ராமன் கோயில் பிர​சாதம் பெற இந்​தி​யா​வில் ரூ.51 எனவும், வெளி​நாட்​ட​வர்​களுக்கு 11 டாலர் எனவும் கட்​ட​ணம் நிர்​ண​யித்​துள்​ளார். அந்​தவகை​யில், 3 கோடியே 85 லட்​சம் ரூபாயை, 6 லட்​சத்து 30,695 பக்​தர்​களிடம் ஏமாற்றி வசூல் செய்​துள்​ளார்.

நடவடிக்கை

இதையடுத்து சைபர் கிரைம் தடுப்பு காவல்துறையினர் அதிரடி​யாக செயல்​பட்டு ஆசிஷை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். அவரிடம் இருந்து கடவுச்சீட்டை பறி​முதல் செய்​தனர். தற்​போது அவரிடம் இருந்து 2 கோடியே 15 லட்​சத்து 8,426 ரூபாய் வசூல் செய்​யப்​பட்​டுள்​ளது. மீத​முள்ள ஒரு கோடியே 70 லட்​சத்து 47,313 ரூபாயை​யும் மீட்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

இணை​ய தளத்​தின்​
நம்​பகத்​தன்​மை​யை
சரி​பார்​க்​க…

இந்த வழக்கு உ.பி. சைபர் கிரைம் பிரிவு ஆய்​வாளர் முகமது அர்​ஷத் தலை​மை​யில் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. சைபர் கிரைம் குற்​றங்​களில் முதல் முறை​யாக ஏமாற்​றப்​பட்ட தொகையை மீட்​டுள்​ள​தாக காவல் துறை​யினர் கூறுகின்​றனர். தற்​போது அயோத்தி ராமன் கோயில் வளாகத்​தில், சன்னதி​களுக்​கும் பிராண பிர​திஷ்டை நடை​பெற்றுள்ளது. அதனால் போலி இணை​யதளங்​கள் பெரு​கும் அபா​யம் உள்​ள​தாக காவல்துறையினர் எச்​சரித்​துள்​ளனர். மேலும், பிர​சாதம் பெற நினைக்​கும்​ பக்​தர்​கள்​, இணை​ய தளத்​தின்​ நம்​பகத்​தன்​மை​யை சரி​பார்​க்​க அறி​வுறுத்தியுள்​ளனர்​.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *