உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
புதுடில்லி ஜூன் 4 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிட மிருந்து அரசுக்கு வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
துணைவேந்தர்கள் நியமனம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழ கங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அந்த 10 சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது.
அதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களை தமிழ்நாடு அரசு கடந்த ஏப். 11 அன்று அரசிதழில் வெளியிட்டது.
இதை எதிர்த்து நெல்லையைச் சேர்ந்த வழக்குரைஞரான குட்டி என்ற வெங்கடாசலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வான நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாரா யணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மே 21 ஆம் தேதி நடந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கு ரைஞர் தாமா சேஷாத்ரி நாயுடுவும், யுஜிசி சார்பில் ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும் ஆஜராகி வாதிட்டனர். தமிழ்நாடு அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கு ரைஞர் பி.எஸ்.ராமனும், உயர் கல்வி துறை தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சனும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து அன்றைய நாள் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்நிலையில் இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு 10 சட்ட மசோதாக்களையும் அரசிதழில் வெளியிட்டது.
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரசியல் கட்சி பிர முகரான குட்டி என்ற வெங்கடாச்சல பதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அவசர கதியில் விசாரித்து, அதுவும் நீதிமன்ற நேரம் முடிந்த பின்னரும் மாலை 6.30 மணிவரை இடைவிடாது விசாரித்து இடைக்காலத் தடை விதித்துள்ளது.
குட்டி என்ற வெங்கடாச்சலபதி தொடர்ந்துள்ள இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவசரம், அவசரமாக அதுவும் உயர்நீதிமன்ற விடுமுறைகால குறிப்பிட்ட அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்திருக்கும் விவரத்தை சம்பந்தப்பட்ட அமர்வில் தெரிவித்த பின்ன ரும் இடைக்காலத்தடை விதித்திருப்பது ஒரு தலைபட்சமானது.
தமிழ்நாடு அரசின் சட்டங்களுக்கு தடை கோரும் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க போதுமான கால அவகாசம் தராமல் விடுமுறை கால அமர்வில் அவசரகதியில் விசா ரிக்க வேண்டிய அவசியமே இல்லாதபோது இடைக்காலத்தடை விதித்து இருப்பது அநீதி யாகும்.
இந்த வழக்கைத் தொடர்ந்த குட்டி என்ற வெங்கடாச்சலபதி ஏப்ரல் 11 முதல் மே 9 ஆம் தேதி வரை எந்த அவசரமும் காட்டவில்லை. ஆனால், மே இரண்டாவது வாரத்தில் விசார ணைக்கு வரும் வகையில் அவசர வழக்கு எனக்கூறி தாக்கல் செய்கிறார். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு விசாரித்து உத்தரவு பிறப்பி்த்து இருப்பது புரியாத புதிராக உள்ளது.
இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக்கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் எவ்வ ளவோ போராடியும் அந்த அமர்வு எங்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசின் சட்டங்களை விட பல்க லைக்கழக மானியக் குழுவின் விதி மேலானது எனக்கூறி இடைக்காலத் தடை விதித்து இருப்பது சட்ட விரோதமானது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தள்ளிப்போகும் சூழலில் சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை காலஅமர்வு பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.