தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்!

viduthalai
2 Min Read

27 வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களின் தலைப்புகள்!
பொதுக்குழு உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்!

மதுரை, ஜூன் 2 – தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (1.6.2025) மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் 27 வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத் தீர்மானங்களின் தலைப்புகளை இங்கே வெளியிட்டுள்ளோம்.அது வருமாறு:-

  1. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்!
  2. மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் திமுக தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுகள்!
  3. இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு!
  4. உழவர்கள் – நெசவாளர்கள் – மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ் விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்!
  5. தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் திமுக அரசுக்குப் பாராட்டு!
  6. ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்!
  7. தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் – இளம் தலைவர் அவர்களின் பணி தொடரத் துணை நிற்போம்!
  8. ஏழை – எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!
  9. தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!
  10. தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் ஹிந்தித் திணிப்பைக் கைவிடுக!
  11. கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
  12. ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்!
  13. சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!
  14. ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!
  15. மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகள்!
  16. மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக!
  17. ஜாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!
  18. தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது!
  19. ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான திமுக தலைவருக்குப் பாராட்டு!
  20. குடியரசுத் துணைத் தலைவரின் விமர்சனத்திற்குக் கண்டனம்!
  21. அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
  22. உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக!
  23. மலரட்டும் மாநில சுயாட்சி!
  24. பேரிடர் மீட்புப் பணியில் திமுக அரசுடன் திமுகவினர் துணை நிற்போம்!
  25. எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்!
  26. அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு!
  27. வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடித்து 2026-இல் திமுக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்!

நன்றி: ‘முரசொலி’ 2.6.2025

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *