27 வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களின் தலைப்புகள்!
பொதுக்குழு உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்!
மதுரை, ஜூன் 2 – தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (1.6.2025) மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் 27 வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத் தீர்மானங்களின் தலைப்புகளை இங்கே வெளியிட்டுள்ளோம்.அது வருமாறு:-
- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்!
- மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் திமுக தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுகள்!
- இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு!
- உழவர்கள் – நெசவாளர்கள் – மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ் விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்!
- தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் திமுக அரசுக்குப் பாராட்டு!
- ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்!
- தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் – இளம் தலைவர் அவர்களின் பணி தொடரத் துணை நிற்போம்!
- ஏழை – எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!
- தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!
- தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் ஹிந்தித் திணிப்பைக் கைவிடுக!
- கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
- ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்!
- சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!
- ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!
- மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகள்!
- மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக!
- ஜாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!
- தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது!
- ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான திமுக தலைவருக்குப் பாராட்டு!
- குடியரசுத் துணைத் தலைவரின் விமர்சனத்திற்குக் கண்டனம்!
- அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
- உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக!
- மலரட்டும் மாநில சுயாட்சி!
- பேரிடர் மீட்புப் பணியில் திமுக அரசுடன் திமுகவினர் துணை நிற்போம்!
- எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்!
- அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு!
- வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடித்து 2026-இல் திமுக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்!
நன்றி: ‘முரசொலி’ 2.6.2025