நியூஜெர்சி. ஜூன் 1- நாம் வாழும் இந்த பூமி மற்றும் இதர கோள்கள் சூரியனை ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. ஒரு காலத்தில் சூரியன் உள்பட 7 கோள்கள் மட்டுமே அறியப்பட்ட நிலையில், ஆய்வாளர்களின் தொடர் ஆராய்ச்சி காரணமாக, சூரிய மண்டலத்திலேயே அதிக தொலைவில் அமைந்துள்ள சனி கோளுக்கும் அப்பால், யுரேனஸ், நெப்டியூன், ‘புளூட்டோ’ உள்ளிட்ட கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இன்றும் புளூட்டோ கோளிற்கும் அப்பால் கோள்கள் உள்ளதா? அவற்றில் உயிரினங்கள் வாழ்கிறதா? என்ற ஆய்வாளர்கள் அய்யம் இன்றும் முடியவில்லை.
1930ஆம் ஆண்டில், வானிய லாளர்கள் பிளானட் ‘எக்ஸ்’அய்த் தேடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் புளூட்டோவைக் கண்டு பிடித்தனர். அதன் ஒரு பகுதியாக தற்போது ‘புளூட்டோ’வையும் தாண்டி, சூரிய மண்டலத்தின் விளிம்பில் ஒரு கோள் நமது பார்வையிலிருந்து விலகி பதுங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த கோளுக்கு தற்போது ‘பிளானெட் நைன்’ (ஒன்பதாவது கோள்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம், அமெரிக்கா நியூஜெர்சியின் மேம்பட்ட ஆய்வு நிறுவன ஆய்வாளர் சிஹோவோ செங் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவின்படி, இந்த புதிய கோள் தோராயமாக 700 கி.மீ. அகலம் கொண்டது. இது ‘புளூட்டோ’வை விட மூன்று மடங்கு சிறியதாகவும் இருக்கிறது.
ஆனால் ஒரு கோள் என்று கருதப்படும் அளவுக்கு பெரியதாக உள்ளதாகவும், எனினும் இது ஒரு குள்ள கோளாக (டிராவ்வார்ப்) கருதப்படும் என்று சிஹாவோ செங் கூறினார்.
இந்த கோள் தற்போது பூமியிலிருந்து நெப்டியூனை விட மூன்று மடங்கு தொலைவில் உள்ளது. மேலும் அதன் மிக நீளமான சுற்றுப்பாதை பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விட 1,600 மடங்கு அதிகமாக நகர்ந்து, சூரிய மண்டலத்தைச் சுற்றியுள்ள பனிக்கட்டி பாறைகளின் வளையத்திற்குள் செல்கிறது.
இந்த கோள் கடந்த காலத்தில் நமது சூரியனைத் தவிர வேறு நட்சத்திரங்களைக் கடந்து சென்றிருக்கலாம் என்று செங் கூறினார். அதன் 25,000 ஆண்டு சுற்றுப்பாதையில், இந்தப் பொருள் பூமிக்கு அருகில் இருப்பதால், சுமார் 0.5 சதவீதம் நேரம் மட்டுமே காணப்படுகிறது, அதாவது தோராயமாக ஒரு நூற்றாண்டு இது ஏற்கெனவே மங்கலாகி வருகிறது என்று அவர் கூறினார்.
ஜேம்ஸ் வெப், ஹப்பிள் மற்றும் அல்மா தொலைநோக்கிகள் மூலம் தங்கள் கண்டுபிடிப்பைச் சுட்டிக் காட்ட ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த தசாப்தத்தில் வெளிப்புற சூரிய மண்டலத்தில் இது மிகவும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும் “பெரிய தொலை நோக்கிகள் பெருவெளியின் விளிம்பிற்கு கிட்டத்தட்ட பார்க்கக்கூடிய ஒரு சகாப்தத்தில் நாம் இருக்கி றோம். ஆனால் அதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது பெரும்பாலும் தெரியவில்லை என்று செங் கூறினார்.