கம்பம், மே 31– கம்பம் மாவட்டம் கே.கே.பட்டி ஆர்.வி.ஸ்.மஹாலில், 25-05-2025 அன்று காலை 9.30 மணியளவில் சார்பில் 54-ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ப.செந்தில்குமார் மாணவர்களை வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் வெ.தமிழ் செல்வன், நிகழ்ச்சிக்கு தலைமை யேற்று உரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன். தொடக்க உரையாற்றினார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட காப்பாளர் கருஞ்சட்டை நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் கா.சிவா. மாவட்ட துணை செயலாளர் பா.முகிலன். மாவட்ட ப.க.தலைவர் டி.பி.எஸ்.ஆர்.அரிகரன், பொதுக்குழு உறுப்பினர் வி.பாஸ்கரன, தேனி மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன், மாநில இளைஞரணி துணை செயலாளர் மு.முத்தமிழன், விளையாட்டு அணி மாநில செயலாளர் ம.பூவரசன், கூடலூர் நகர செயலாளர் கோ.வி.நாகராஜன்.
மாவட்ட மகளிர் பாசறை சுமிலாசிவா, கே.கே.பட்டி நகர செயலாளர் ப.அழகேசன், மாவட்ட துணை செயலாளர் கே.பி.நாகராஜ், கம்பம் ஒன்றிய தலைவர் ச.வனராஜ், கே.கே. பட்டி நகரத் தலைவர் சி.முருகன், சுருளிப்பட்டி நகர செயலாளர் பி.ஆண்டிசாமி, கம்பம் ஒன்றிய செயலாளர் ஓ.மகேந்திரன், கே.ஜி.பட்டி நகர செயலாளர் எஸ்.செல்வம், என்.டி.பட்டி நகர செயலாளர் சி.மணிகண்டன், நகர துணை செயலாளர் கே.கே.பட்டி.குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
காலை 10.00 மணிக்கு வகுப்பு தொடங்கியது. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் மா.அழகிரிசாமி முதல் வகுப்பு எடுத்தார்.
சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் முனைவர் வா.நேரு. பேய் ஆடுதல் சாமி ஆடுதல் என்னும் அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் மருத்துவர் இரா.கவுதமன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் ஈட்டி கணேசன், பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகன். வகுப்பு எடுத்தார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரை காணொலி வாயிலாக ஒளிப்பரப்பப்பட்டது.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உரையாற்றினார்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் மா.சுரேஷ் நன்றி கூறினார்.
ஆண்கள்- 18. பெண்கள்- 14, கல்லூரி மாணவர்கள் – 09 பள்ளி மாணவர்கள்- 21 பங்கேற்றனர்.
சிறப்பாக வகுப்பை கவனித்து குறிபெடுத்த மாணவர்களுக்கு பரிசு புத்தகங் களாக வழங்கப்பட்டது.
பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் தங்கள் கருத்துக் களை பகிர்ந்து கொண்டனர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முதல் பரிசு ஜி.பானுமதி, இரண்டாம் பரிசு மு.இளம்பரிதி, மூன்றாம் பரிசு ம.யாழினி, நான்காம் பரிசு சி.தமிழ்இலக்கியா, அய்ந்தாம் பரிசு பி.ரோஹிந்த்.
ரூ.6,354-க்கு புத்தகங்கள் விற்பனையாயின.