புதுடில்லி, ஜூன் 26 – டில்லியில் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நேற்று (25.6.2023) மாலை கலைஞர் நூற்றாண்டு விழாவின் நிறைவாக மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில்,ஏ.கே.எஸ்.விஜயன் முன்னிலையில், சமூக நீதி காக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு பெரிதும் வழிகாட்டுவது டாக்டர் கலைஞரின் அரசியல் பணியே என்ற தலைப்பில் கவிஞர் இனியவன், கலைப்பணியே என பேராசிரியர் விஜய குமார், பட்டிமன்ற நடுவராக லியோனி பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டில்லித் தமிழ்ச் சங்கத் தின் பொதுச்செயலாளர் இரா. முகுந் தன் அனைவரையும் வரவேற்றுப் பேசி னார். சங்கத்தின் இணைச்செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் உஷா தொகுப் புரை ஆற்றினர். கலைஞர் நூற்றாண்டு இலவச மருத்துவ முகாம் நடத்தியதற்காக டாக்டர் சுந்தர்ராஜனை மாநிலங் களவை மேனாள் உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி பாராட்டி சிறப்பு செய்தார்.
டில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொரு ளாளர் அருணாச்சலம், இணைப்பொரு ளாளர் மணவாளன், செயற்குழு உறுப் பினர்கள் அமிர்தலிங்கம், ரங்கநாதன், கோவிந்தராஜன், காத்திருப்பு உறுப் பினர் ராஜா மற்றும் டில்லி வாழ் தமி ழர்கள் பலர் கலந்து கொண்டனர்.