கலியப்பேட்டை தமிழ்மணி மறைவு கழகப் பொதுச் செயலாளர் இறுதி மரியாதை

viduthalai
1 Min Read

செங்கல்பட்டு, மே 31– செங்கல்பட்டு நகர கழகத் தலைவர், கலியப்பேட்டை ஜி.தமிழ்மணி 29.05.2025 அன்று மறைவுற்றார். 30.05.2025 பகல் 12 மணி அளவில் காஞ்சிபுரம்  மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கலியப்பேட்டை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மறைந்த கலியப்பேட்டை ஜி.தமிழ்மணியின் மனைவி, மகன் த. பிரபாகரன், மகள்கள் ஆகியோரிடம் ஆறுதல் தெரிவித்தார்.

நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மாவட்ட காப்பாளர் டி.ஏ.ஜி.அசோகன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அ.செம்பியன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் மா.நரசிம்மன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண் குமார், செங்கல்பட்டு மாவட்ட துணைச் செயலாளர் ப.முருகன், செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர் சகாயராஜ், மாவட்ட அமைப்பாளர் சிவகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் பிச்சை முத்து, மறைமலைநகர் நகர அமைப்பாளர் வசந்தன், செங்கல்பட்டு நகர பொறுப்பாளர் தனசேகரன், தாம்பரம் மதிவாணன், கல்பாக்கம் குமரவேல், காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளர் சீதாவரம் ஆ.மோகன், காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ப. இளம்பரிதி, வாலாஜாபாத் ஒன்றிய தலைவர் செல்வம், காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அ.ரேவதி, செ.ரா.முகிலன், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம்  பொறுப்பாளர் காஞ்சி அமுதன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

மறைந்த கலியப்பேட்டை ஜி.தமிழ்மணி ஏற்பாட்டில் கலியப்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் திறந்தார். கலியப்பேட்டையில் ஆண்டுக்கு ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக ஒருங்கி ணைத்து கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *