வெளிநாடுகளை நம்பும் இந்திய நிறுவனங்கள்: ப.சிதம்பரம்

viduthalai
1 Min Read

இந்தியாவில் முதலீட்டு திட்டங்களை இந்திய நிறுவனங்களே கைவிடுவதாக ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய அறிவிப்புகளுடன் கைவிடப்பட்ட திட்டங்களின் விகிதம் 2024-2025-இல் 35.9 விழுக்காடாக ஆக உயர்ந்திருப்பதாகவும், அதேவேளையில் வெளிநாடுகளில் முதலீட்டை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்றிய அரசு, கவனம் செலுத்த வேண்டும் என கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்
ஆபரேஷன் சிந்தூரின் போது பாக். தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். பாக். தாக்குதலால் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *