எதிர்ப்பின் விளைவாக ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் விதிமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன

2 Min Read

மதுரை, மே 30 மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
சு. வெங்கடேசன் வெளியிட் டுள்ள சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் நகல் விதிமுறைகள் கோடானுகோடி எளிய, நடுத்தர மக்களின் வாழ்வில் பேரிடியாக அமைந்திருப்பதை விரிவான கடிதம் அளித்து தலையீட்டைக் கோரி இருந்தேன்.   தற்போது நிதி அமைச்சரின் தலையீட்டின் பேரில் நிதித்துறை செயலாளர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

விதிமுறைகள் நிறுத்தம்

உடனடியாக அமலுக்கு வருமென்று அறிவிக்கப்பட்ட புதிய நகைக் கடன் விதிமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அவசரப்படாமல் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு கொண்டு வருமாறும் கூறப்பட்டு இருப்பது முதல் வெற்றி.  எளிய நகைக் கடன்தாரர்கள் பாதிப்புக்கு ஆளாகாமல் கவனம் கொள்ளவும், ரூ.2 லட்சம் கடனுக்கு கீழான விண்ணப்பதாரர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இருந்து விதி விலக்கு அளிக்குமாறும், அவர்களுக்கு கடன்கள் தாமதமின்றி விரைவில் வழங் கப்பட ஆவன செய்யுமாறும், பொது வெளியில் எழுந்துள்ள கவலைகளை கணக்கில் கொண்டும் விதி முறைகளை வகுக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தினார்.

இது மக்களின் குரலுக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி. எனது கவனத்திற்கு இப் பிரச்சினையை கொண்டு வந்த பொது மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன்.

நேரில் சந்தித்த போது உறுதி அளித்தபடி கோரிக்கைக்கு செவிமடுத்த   நிதியமைச்சருக்கு நன்றி.

விதிமுறைகளை இறுதி செய்யும் போது எளிய நடுத்தர மக்களை, சிறு தொழிலகங்கள் – வணிகர்களை – விவசாயிகளை பாதிக்கக் கூடிய எல்லா நிபந்தனைகளையும் மேற்கூறிய அறிவுறுத்தலைகளை கணக் கில் கொண்டு ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுமென்று நம்பு கிறேன். கூடுதல் கடன்கள் கிடைப்பதில் தற்போது உள்ள சிரமங்களும் களையப்பட வேண்டுமென்று நிதியமைச்சரை கேட்டுக்கொண்டேன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன் தன்னு டைய சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார்.

எதிர்ப்பின் விளைவு

இந்திய ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு தங்கநகை வங்கிகளில் அடமானம் வைப்பது தொடர்பாக மனிதா பிமானமற்ற பல விதிமுறைகளை அறிவித்திருந்தது.

இதனை அடுத்து தமிழ் நாட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது, முதலமைச்சர், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைசிறுத்தைகள் கட்சி போன்றவை விதிமுறைகளை ரத்துசெய்யக்கோரி அறிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
சு.வெங்கடேசன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தங்கநகை அடமான தொடர்பான புதிய விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *