டில்லி மாநிலத் தேர்தல் வெற்றிக்கு ரூ.57 கோடி செலவிட்ட பா.ஜ.க.

viduthalai
1 Min Read
The Chief Minister of Delhi, Shri Arvind Kejriwal calling on the Vice President, Shri M. Venkaiah Naidu, in New Delhi on September 02, 2017.

புதுடில்லி, மே 30- தலைநகர் டில்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வென்றது.

சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் பாஜக பெற்ற வெற்றி இது. அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி சிறை சென்றது, அவர் சொகுசு மாளிகையில் வாழ்ந்தார் என முன்னெடுத்த பிரச்சாரம் ஆகியவை பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது.

டில்லி சட்டமன்றத்தில் மொத் தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களைப் பெற்ற போது பாஜக 48 இடங்களைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற் றது. இந்நிலையில் தேர்தல் ஆணை யத்திற்குக் கட்சிகள் வழங்கிய கணக்கு விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி கடந்த தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆம் ஆத்மி கட்சி ரூ.14.51 கோடியை செலவிட்டுள்ளதாக அவர்களின் செலவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதில் பொது கட்சி பிரச்சாரத்திற்கான மொத்த செலவாக ரூ.12.12 கோடி மற்றும் கட்சி வேட்பாளர்களுக்கான மொத்த செலவு ரூ.2.39 கோடி ஆகும். அதேநேரம் தேர்தல் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பாஜகவின் செலவின அறிக்கையின்படி, பாஜக செலவிட்ட தொகை மொத்தம் ரூ.57.65 கோடி ஆகும். அதில் ரூ.39.15 கோடி பொது கட்சி பிரச்சாரத்திற்கான மொத்த செலவாகவும், மேலும் ரூ.18.51 கோடி கட்சி வேட்பாளர்களுக்கான மொத்த செலவாகவும் செலவிடப்பட்டது. காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்திற்கான பொதுச் செலவாக ரூ.40.13 கோடியும், கட்சி வேட்பாளர்களுக்கான மொத்தச் செலவாக ரூ.6.06 கோடியும் உட்பட மொத்தம் ரூ.46.19 கோடியை செலவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *