சென்னை, மே 28– பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப் பப் பதிவு கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இதற் கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 6ஆம் தேதி ஆகும்.
செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் உள் ளிட்ட பொறியியல் சார்ந்த படிப்புகளுக்கு மவுசு அதிகரித்ததால், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்தே மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக பதிவு தொடங்கிய 2ஆவது நாளில் மட் டும் 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். மற்ற நாட்களில் குறைந் தது 5 ஆயிரம் பேராவது விண் ணப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (27.5.2025) வரையிலான தகவலின்படி, 2 லட்சத்து 55 ஆயிரத்து 538 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 615 பேர் விண்ணப்ப கட் டணங்களை செலுத்தியும், 1 லட்சத்து 49 ஆயிரத்து 800 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் இருக்கின்றனர். இதே வேகத்தில் சென்றால் விண் ணப்பப்பதிவு 3 லட்சத்தை கடக்க வாய்ப்பு உள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப் பப்பதிவு அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிலும் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடு கையில், இந்த ஆண்டு பதிவு செய்வோரின் எண் ணிக்கை உயருகிறது.