புதுடெல்லி, மே.27- ஒரு பெண் ஆடை வடிவமைப்பாளரும், அவருடைய கணவரும் விவாகரத்து வழக்கை சந்தித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, அந்த பெண், தன்னுடைய 3 வயது குழந்தையுடன் வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனு. நீதிபதிகள் பி. வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (26.5.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு அந்த இணையருக்கு சுவையான அறிவுரை கூறினர்.
நீதிபதிகள் கூறிய தாவது:-
3 வயது குழந்தையை வைத்துக்கொண்டு உங்களுக்குள் ‘நான்’ என்ற அகங்காரம் எதற்கு? கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டபடி பேசுங்கள். அதற்கு உச்சநீதிமன்ற உணவகம் நன்றாக இருக்காது. உங்களுக்கு வேறு ஒரு தனிஅறை ஏற்பாடு செய்து தருகிறோம். ஒரு கப் காபியில் எவ் வளவோ சாதிக்கலாம். கடந்த காலத்தை கசப்பு மருந்துபோல் நினைத்து மறந்து விடுங்கள். எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள். பிரச் சினைகளை மனம் விட்டுப்பேசி சுமுக தீர்வு காணுங்கள்.
உங்களிடம் ஆக்கப்பூர்வமான முடிவை எதிர்பார்க்கிறோம் குழந் தையுடன் வெளிநாட்டுக்கு பயணம் செய்வது பற்றி இருவரும் பேசி, நாளை அதாவது 27.5.5025 நீதி மன்றத்திற்கு உங்கள் முடிவை சொல்லுங்கள். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.