ஆவடி மாவட்டம் பூந்தமல்லி பகுதி திராவிடர் கழக செயலாளர் தி.மணிமாறன்- கோமதி ஆகியோரின் மகன் பெரியார் பிஞ்சு ம.கோ.இளமாறன் அவர்களின் முதலாமாண்டு பிறந்த நாள் விழா 26-05-2025 திங்கட் கிழமை இரவு 07-00 மணிக்கு அவரது இல்லத்தில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன், துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேசன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி, பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.வேல்முருகன், அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இரா.இராமலிங்கம், செயலாளர் அய்.சரவணன், மதுரவாயல் பகுதி தலைவர் சு.வேல்சாமி,திருமுல்லைவாயல் பகுதி கழக செயலாளர் ரவீந்திரன் பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன் ,எ.கண்ணன்,அண்ணாநிசார், பகுத்தறிவு, சந்திரபாபு, சுந்தர்ராஜன் பூந்தமல்லி சந்தோஷ் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.