தாம்பரம், மே 27– திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்முறைப்படுத்தும் நோக்கில் தாம்பரம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு கழக மாநில இளைஞரணிச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தலைமையில் தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் புத்தக நிலையத்தில் நடைபெற்றது.
தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தையன் மற்றும் தாம்பரம் மாவட்ட கழக செயலாளர் கோ.நாத்திகன் முன்னிலை வகித்தனர். தாம்பரம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தே.சுரேஷ் கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட இளைஞரணித் தலைவர் இர.சிவசாமி வரவேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, திராவிடர் மாணவர் கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட ஆக்க பணிகளை செய்து தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதி கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற சமூக அக்கறையுடன் உரை நிகழ்த்தினார். மேலும் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறது அதன் தொடர்ச்சியாக தாம்பரம் மாவட்ட பகுதியில் இருக்கும் கல்லூரிகள், பள்ளிகள், இரவு பாடசாலைகள் ஆகியவைகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நேரில் சந்தித்து பெரியாரின் பகுத்தறிவு கொள்ளைகளை எடுத்துக்கூறி கழகத்தில் இணைந்து பணியாற்ற மாவட்ட கழக பொறுப்பாளர்கள் முன் முயற்சி எடுத்து சமூகத்தில் களமாட வேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
15.6.2025 ஆம் தேதி உண்மை வாசகர் வட்டம் தொடங்கி கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
22.6.2025 அன்று மாலை தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
29.6.2025 அன்று இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தாம்பரம் மாவட்டம் முழுவதும் கழக விழிப்புணர்வு கண்காட்சிகள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட தீர்மானங