வடசென்னை அய்.டி.அய்.யில் ‘ட்ரோன் – ரோபோட்டிக்ஸ் ’ படிப்புக்கு மாணவர் சேர்க்கை ஜூன் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

1 Min Read

சென்னை, மே 27- சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடசென்னை அய்.டி.அய்.-யில் 2025ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற்ன.

இதற்காக  விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 13, 2025 ஆகும். விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைன் மூலம்: www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

நேரடியாக: வண்ணாரப்பேட்டை அய்.டி.அய். வளாகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்.

பயிற்சிப் பிரிவுகள்

2 ஆண்டு தொழிற் பிரிவுகள்: கட்டடப் பொறியியல் உதவியாளர் கட்டட பட வரைவாளர்  இயந்திர பட வரைவாளர்  லிஃப்ட் மெக்கானிக்  எலக்ட்ரீசியன்  ஏசி – ஃபிரிட்ஜ் டெக்னீசியன்  வயர்மேன்  எலக்ட்ரிக் வாகன மெக்கானிக்  வடிவமைப்பு  விர்ச்சுவல் வெரிஃபயர்  அட்வான்ஸ் சிஎன்சி டெக்னீசியன்

1 ஆண்டு படிப்புகள்:  பிளம்பர்  வெல்டர்  இன்டீரியர் டிசைன் மற்றும் டெக்கரேஷன்

ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் (தொழில்துறை 4.0 திட்டத்தின் கீழ்)  டிஜிட்டல் உற்பத்தி (தொழில்துறை 4.0 திட்டத்தின் கீழ்)  6 மாத தொழிற்பிரிவு: ட்ரோன் விமானி

கல்வித் தகுதிகள்

8, 10ஆம் வகுப்பு முதல் டிப்ளமோ, பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எந்த கட்டணமும் இல்லை.

உதவித்தொகை

பயிற்சி காலத்தில் மாதம் ரூ.750 உதவித் தொகை வழங்கப்படும்.      தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களின் கீழ் ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு

பயிற்சி முடிந்தவுடன் வளாக நேர்காணல் நடத்தப்பட்டு, தொழில் நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

பிற சலுகைகள்

இலவச பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவி, சீருடைகள், பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: 9499055653,  8144622567  ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *