புதுச்சேரி, மே.27- பன்னாட்டு யோகா விழாவுக்கு வைக்கப்பட்ட புதுவை அரசு விளம்பர பதாகைகளில் தமிழை புறக்கணித்து இடம் பெற்றிருந்த ஹிந்தி எழுத்து களை தமிழின ஆர்வலர்கள் கருப்பு மை பூசி அழித்தனர்.
பன்னாட்டு யோகா நாள்
ஜூன் 21-ஆம் தேதி பன்னாட்டு யோகா நாள் ஆகும். இதையொட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் மத்திய ஆயுஷ் அமைச்சக மெரார்ஜி தேசாய் தேசிய யோகா இன்ஸ்டிடியூட் சார்பில் இன்று (27.5.2025) காலை 6.30 மணி முதல் 8 மணி வரை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கலந்து கொண்டு யோகாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சட்டமன்றத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் புறக்கணிப்பு
இதற்காக புதுச்சேரி நகரின் முக்கிய சந்திப் புகள் உள்பட நகரில் பல இடங்களில் விளம் பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் யோகா குறித்து ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. எந்த இடத்திலும் இல்லாத வகையில் முழுவதுமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து புதுச்சேரி மக்கள், சமூக ஆர்வலர்கள் தமிழின உணர்வாளர்கள் கடும் அதிருப்தி அடைந் தனர்.
அரசு சார்பில் வைக் கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு ஹிந்தி வாசகங்கள் இடம் பெற்று இருந்தது தமிழ் ஆர்வலர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கருப்பு மை பூசி அழிப்பு
இந்த நிலையில் தமிழ் மொழி இனநல ஆர்வலர்கள் ராஜீவ்காந்தி சதுக்கம், இந்திரா காந்தி சதுக்கம் ஆகிய முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் இருந்த ஹிந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி அழித்து முழக்கம் எழுப்பினர். இதே போல் கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங் களில் வைக் கப்பட்டிருந்த பேனர் களில் உள்ள ஹிந்தி எழுத்துக்களையும் அழித்தனர்.