சென்னை,நவ.13- சென்னை ரயில்வே கோட்டத்தில் ஒரே நாளில் பயணச்சீட்டு பரிசோதனையில் ரூ.24.64 லட்சம் அபராத மாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ரயில்வே கோட்டத்துக்குள் இயக்கப்படும் புறநகர், மெயில், விரைவு ரயில்களில் முறையான பயணச்சீட்டு இல் லாமல் பயணம் செய்பவர்களை கண்டறி யும் வகையில் தினமும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தீபாவளியை முன் னிட்டு தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதிக ளில் 10.11.2023 அன்று 568 பயணச் சீட்டு பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபட் டனர்.
இதில், பயணச் சீட்டு இல்லாமலும், முறையற்ற பயணச் சீட்டு மூலமும் பயணித்த 5,047 பேரிடமிருந்து ரூ.24.64 லட்சம் அபராதமாக வசூலிக்கப் பட்டது. இதுவரையில் நடந்த பரி சோதனைகளில் வசூலிக்கப்பட்ட அபராதத்தில் 10.11.2023 அன்று நடத் தப் பட்ட பரிசோதனையில் தான் 2ஆவது மிகப்பெரிய அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை சென்டிரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையங்களில் 2,066 வழக் குகள் பதிவு செய்து ரூ.6.42 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் முறையான பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது, அதிக அளவிலான பொதிகள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் இது போன்று தொடர் சோதனை மேற் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.