இம்பால், ஜூன்,27- மணிப்பூர் வன்முறைக்கு எதிராக பழங்குடியின மாணவர் குழு சவப்பெட்டி பேரணி நடத்தியது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப் பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நிகழ்ந்து வரும் வன் முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், 3,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். லட்சக்கணக் கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள அவல நிலை அரங்கேறி உள்ளது.
பாதுகாப்புப் படைகள், ராணு வம் குவிப்பு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு வார்த்தை, அனைத்துக் கட்சி கூட்டம் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் வன்முறையை கட்டுப்படுத்த இயல வில்லை.
உள்நாட்டுப் போர் அளவில் வன்முறை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பழங்குடியின மாணவர்கள் குழு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள லம்கா பகுதியில் கருப்பு உடை அணிந்து “அமைதி சவப்பெட்டி பேரணி” நடத்தினர்.
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்தப் பேரணி யின்பொழுது,”வன்முறையில் உயிரிழந்த பழங்குடியினர் உடல்களை முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும்” என கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.