செய்திச் சுருக்கம்

viduthalai
2 Min Read

இ.டி. இல்லையென்றால் மோடி இல்லை:
சஞ்சய் ராவத்

டாஸ்மாக் வழக்கில் தமிழ்நாட்டில் நடந்தது ஒன்றும் புதிதல்ல, தானும் இ.டி.யால் பாதிக்கப் பட்டவன் தான் என சிவசேனா (UBT) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். தன்னைப் போலவே பலரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாஜகவின் ஆயுதமே அமலாக்கத்துறை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அமலாக்கத்துறை இல்லையென்றால் மோடி, அமித்ஷா இல்லை என்றும் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் வழக்கில் ED சட்டவிரோதமாக நடந்து கொண்டதாக உச்சநீதிமன்றம் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு Consultant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 31ஆம் தேதிக்குள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் தேர்வாகும் ஊழியர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.40,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

கரோனா பற்றி தவறான தகவலை நம்பாதீர்கள்..தமிழ்நாடு அரசு

கரோனா குறித்த தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. கரோனா தொற்றுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது. எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. கரோனா பரவலால் மீண்டும் லாக்-டவுன் வரும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்

தவெகவில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி, மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து தவெக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்களும் திமுகவில் இணைந்துள்ளனர். இந்த இணைப்புகளுக்கு மிக முக்கிய காரணம் திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி எனக் கூறப்படுகிறது. ஒருவாரமாக தொடர் பேச்சுவார்த்தை மூலம் அவர்களை திமுக பக்கம் கொண்டு வந்து இருக்கிறார்.

சிங்கப்பூர் அமைச்சரவை:
6 தமிழ்நாட்டு வம்சாவளி அமைச்சர்கள்

சிங்கப்பூர் புதிய அமைச்சரவையில் 6 தமிழ்நாட்டு வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர். கே.சண்முகம் – உள்துறை. விவியன் பாலகிருஷ்ணன் – வெளியுறவுத்துறை. இந்திராணி ராஜா – பிரதமர் அலுவலக அமைச்சர். முரளி பிள்ளை – சட்டம், போக்குவரத்து. ஜனில் – கல்வி, சுற்றுச்சூழல் துறை. தினேஷ் வாசு தாஷ் – தென்கிழக்கு மாவட்ட மூத்த நாடாளுமன்ற செயலாளராகவும் மேயராகவும் நியமனம்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *