புதுடில்லி, மே 25 இந்தியாவில் NB.1.8.1 மற்றும் LF.7 என புதிய வகை கரோனா வைரஸ் திரி புகள் அடையாளம் காணப் பட்டிருக்கின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்கள் கண்ட றியப்பட்டிருக்கும் நிலையில், இது ஆபத்தானதா? என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் NB.1.8.1 வகை கரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டது. அதேபோல இந்த மாதம் குஜராத்தில் LF.7 கரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் உலகின் பல இடங்களிலும் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்த தாக்கம் திடீரென உயர்ந்திருக்கிறது. இந்தியாவிலும் புதிய தொற்று பரவல் தொடங்கியுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கரோனா வைரஸின் இரண்டு புதிய வகைகள் இந்தியாவில் உருவாகியுள்ளதாக, இந்தியாவின் COVID-19 வைரஸ் மரபணு கண்காணிப்பு கூட்டமைப்பு (INSACOG) தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார மய்யமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த மாதம் சுகாதார மய்யம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “LF.7 மற்றும் NB.1.8 என்பன ஏற்கெனவே உள்ள கரோனா வைரஸின் துணை பிரிவுகள்தான். இவற்றை ஆபத்தானதாகவோ, கவலைக்குரியதாகவோ நினைத்து அச்சப்பட வேண்டியதில்லை. ஆனால் இவை கண்காணிப்புக்கு உரியதாகும். NB.1.8.1 ஆல் ஏற்படும் ஆபத்துகள் பன்னாட்டு அளவில் குறைவாகவே இருக்கின்றன.
தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களை கொண்டு பார்க்கும்போது, நாம் பயன்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட கரோனா வைரஸ் தடுப்பூசிகளே இந்த வகை திரிபு வைரஸ்களுக்கு எதிராக உறுதியாக வேலை செய்யும்” என்று தெரிவித்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை அதிகம் பதிவு செய்யப்பட்ட நோயாளிகள் JN.1 வகை திரிபால் பாதிக்கப்பட்டவர்கள்தான். நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் இந்த திரிபால்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற் கடுத்து BA.2 திரிபு கரோனா வைரஸால் 26% பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஓமிக்ரான் திரிபு வைரஸ்களால் 20% பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இப்போது இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதற்கு காரணம் JN.1 திரிபு வைரஸ்தான். எனவே அச்சமடைய தேவையில்லை. வழக்கமாக மேற்கொள்ளப்படும் சில முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொண்டாலே போதுமானதுதான். கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுதல், மருத்துவமனைகள் அல்லது நெரிசலான இடங்களில் முககவசம் அணிதல், தொற்று பாதிப்பு அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க ஜூனியர் டாக்டர்ஸ் நெட்வொர்க் அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் துருவ் சவுகான் கூறியுள்ளார்.