அரியலூர், மே 24- அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்அரியலூரில் 18.5.2025 ஞாயிறு மாலை 5:30 மணியளவில் சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்றது. சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் சு.ச.திராவிடச் செல்வன் கடவுள் மறுப்புக் கூறினார். நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையேற்க, மாவட்டத் தலைவர் விடுதலை.நீலமேகன் அனைவரையும் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் க சிந்தனைச் செல்வன் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றினார்.
மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் காப்பாளர்கள் சி. காமராஜ் , சு.மணிவண்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் தனது உரையில் சென்னையில் நடைபெற்ற தலைமை செயற்குழுத் தீர்மானங்களையும் அவை செயல்படுத்தப்பட வேண்டி யதன் அவசியத்தை விளக்கி சிறப்புரை யாற்றினார். .அரியலூர் நகர செயலாளர் ஆட்டோ தர்மா நன்றி கூறினார். அமெரிக்காவிற்கு செல்லும் அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து அவர்களுக்கு பொதுச்செயலாளர் ஆடை போர்த்தி சிறப்பு செய்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானங்கள்
அரியலூர் பெரியார் பெருந் தொண்டர் ந. செல்லமுத்துவின் மகன் செ. வீரமணி, ஜெயங்கொண்டம் மேனாள் நகர தலைவர் வை செல்வராஜ், ஆயுதகளம் பெரியார் பெருந்தொண்டர் ரங்கராஜனின் துணைவியார் ஜெயம் அம்மாள் ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
சென்னையில்நடைபெற்ற தலைமை செயற்குழுத் தீர்மானங்களை ஏற்று சிறப்பாக செயல்படுத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவரின் கனவுத்திட்டமாக உருவாகி வரும் பெரியார் உலகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெருமளவு நிதி திரட்டி அளிப்பதெனவும் இனமான ஏடாம் விடுதலைக்கு சந்தாக்களை திரட்டி அளிப்பதெனவும் ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகிறது.
புதிய பொறுப்பாளர்கள்
அரியலூர் மாவட்ட மகளிரணி
தலைவர்: க.ஜோதிமணி
செயலாளர் : செ.பரமேஸ்வரி
துணைத் தலைவர்: இரா. இந்திரா காந்தி
துணைச் செயலாளர்: இ.சத்யா
மகளிர் பாசறை
தலைவர்: செ.ராதிகா
செயலாளர்: மு. எழிலரசி,
பங்கேற்றோர்
பொதுக்குழு உறுப்பினர் இரத்தின ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் க.கார்த்திக், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆ. இளவழகன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் வெ. இளவரசன்,மாவட்ட தொழிலாளரணி செயலாளர் மா. கருணாநிதி , ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன்,, நகர செயலாளர் டி.எஸ்.கே.அண்ணாமலை, தா.பழூர் ஒன்றிய தலைவர் சிந்தாமணி இராமச்சந்திரன். எழுத்தாளர் செந்துறை தா.மதியழகன், செந்துறை ஒன்றியதலைவர் மு.முத்தமிழ்செல்வன், செயலாளர் ராசா செல்வகுமார், சி.கருப்புசாமி,. மாவட்ட இளைஞரணி தலைவர் லெ. தமிழரசன், செயலாளர்க. மணிகண்டன் மணப்பத்தூர் கலைமணி, பெரியாக்குறிச்சி சோ.க.சேகர், அரியலூர் ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து, செயலாளர் த.செந்தில்,நகர செயலாளர் வடலூர் இந்திரஜித், குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர்.