உலக நாடுகளை நவீனப் பாதைக்கு அழைத்துச் சென்றது பொறியியல் தான். அது அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் பெற்ற கல்வி ஆகும்.
இந்தக் கல்வியைப் பெற உலகெங்கும் பொறியியல் கற்கவிரும்பும் மாணவர்கள் நல்ல கல்லூரிகளை தேடிவருகின்றனர். இந்திய அளவில் மிகவும் அதிகமான பொறியியல் கல்லூரிகளுடன் அதிக மாணவர்கள் படிக்கும் பொறியியல் துறையில் முதலிடமும் தமிழ்நாடுதான் பெற்றுள்ளது.
தமிழ்நாடு 3,34,200 இடங்களுடன் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் மகாராட்டிரா 2,37,369 இடங்களுடனும், ஆந்திரப் பிரதேசம் 2,30,254 இடங்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மொத்தமாக இந்தியாவில் உள்ள இளங்கலை பொறியியல் இடங்களின் எண்ணிக்கை 20,01,066 ஆகும்.
தமிழ்நாடு மாநிலம் மொத்த பொறியியல் இடங்களில் 16.7 விழுக்காடு இடங்களை கொண்டுள்ளது, இது நாட்டில் மிக அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்வி வழங்கும் மாநிலமாகும்.
மற்ற மாநிலங்களில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம் (UP) – 1,34,073, பீகார் – 15,294 இருக்கைகள், ராஜஸ்தான் – 76,343 இருக்கைகள், மத்திய பிரதேசம் – 1,02,775 இருக்கைகள், குஜராத் – 61,445 இருக்கைகள்.
அதாவது பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலத்தில் ஒட்டுமொத்த விழுக்காடு 19.4 ஆகும்.
ஆனால், தமிழ்நாட்டின் விழுக்காடு 16.07 கடந்த 4 ஆண்டுகளாக பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (AISHE) அறிக்கையின் படி தமிழ்நாட்டில் ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம், பூடான், தென் மற்றும் வட அமெரிக்காவில் உள்ள நாடுகள்(சிலி மற்றும் அர்ஜண்டைனா உள்ளிட்ட நாடுகள்) மற்றும் ஆப்பிரிக்காவின் சூடான், கென்யா தான்சானியா போன்ற கிழக்கு கடற்கரை ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் சில மாணவர்கள் தமிழ்நாடு வந்து உயர்கல்வி கற்கின்றனர்.
தமிழ்நாடு இந்திய அளவில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வி பயிலும் மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் 3,891 வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி கற்று வருகின்றனர். முன்னதாக, 2013ஆம் ஆண்டின் பழைய மனிதவள மேம்பாட்டு அமைச்சக (MHRD) அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் 2,383 வெளிநாட்டு மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.