டெக்கான் கிரானிக்கல், சென்னை
* டாஸ்மாக்கில் திடீர் சோதனை (ரெய்டு) நடத்தியது வரம்பு மீறிய செயல் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு: கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து விட்டதாக கடும் கண்டனம் – உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு திமுக வரவேற்பு.
* ஒரு மாதம் கடந்தும், பஹல்காம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இன்னமும் பாதுகாப்பு படையினரிடம் பிடிபடாமல் உள்ளனர்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் என்னால் தான் நடந்தது, எட்டாவது முறையாக டிரம்ப் அறிவிப்பு. இது குறித்து மோடியின் விளக்கம் என்ன? காங்கிரஸ் கேள்வி.
* ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் ஜாதிகள் இடையே உள்ள பிற்படுத்தப்பட்ட தன்மையை தெரிந்து கொள்ள குறியீடு உருவாக்கப்படும், தெலங்கானா அரசு முடிவு.
தி இந்து
* துணைவேந்தர் நியமனங்கள் குறித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை உண்மையில் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது, ‘தி இந்து’ தலையங்கம் கண்டனம்.
.– குடந்தை கருணா