ஆளுநர் வருவதால் கருப்புச் சட்டை,
கருப்புத் துப்பட்டா அணிந்து வரக் கூடாதாம்
சேலம், ஜூன் 27 நாளை ஜூன் 28 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற இருக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு மாண வர்கள் கருப்புச் சட்டை அணிந்து வரக்கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலத்தில் உள்ள பெரியார் பல் கலைக்கழகத்தில் 21ஆவது பட்ட மளிப்பு விழா நாளை நடை பெறவுள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கவுள்ளார்.
ஆளுநர் ரவி பெரியார் பல் கலைக்கழகத்திற்கு வரும் நிலை யில், பாதுகாப்புக் காரணங் களுக்காக கருப்புச் சட்டை அணிந்து வரக் கூடாது என மாநகர காவல் துறை பல்கலைக் கழகத்திற்கு அறிவுறுத்தியிக்கிற தாம். இதனையடுத்து பல்கலைக் கழகப் பதிவாளர் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட் டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், “பெரியார் பல்கலைக் கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் ஆளுநர் தலைமையில் 28-.06.-2023 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது. அச்சமயம், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப் பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்துவருவதை உறுதி செய்யு மாறும், கைப்பேசிகள் எடுத்து வருவதை தவிர்க்கு மாறும் சேலம் மாவட்ட காவல்துறையினர் அறி வுறுத்தலின்படி கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளது.
கருப்புச் சட்டை என்றால் அத்தனை அச்சமா ஆளுநருக்கு! பட்டமளிப்பு விழாக்களில் பங் கேற்கத் தேதி வழங்குவதற்கே ஆளுநரைக் கண்டித்து மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டியிருந்ததே! 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு ராஜ்பவனில் இருந்தபடி ஆளுநர் ஆர்.என். ரவி தடையாக இருக்கிறார் என்பதை ஊரறியச் செய்து, கண் டனக் குரல்கள் வலுத்த பிறகு தானே ஆளுநரின் வாகனம் ராஜ்பவனை விட்டுக் கிளம்பியிருக்கிறது. ஆளுநர் ஆர்.என். ரவி, பல்ககைக் கழக வேந்தர் என்ற போர்வையில் நடத்தும் அராஜகத் திற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருக்கும் என்ற அச்சம் தான் கருப்புடையைத் தடை செய்வதற்கான காரணமா? பட்ட மளிப்பு விழாக்களில் வழக்கமாக முன்பு கருப்பு அங்கிகள் பயன் படுத்தப்படுமே, அப்படி பயன்படுத் தப்பட்டால் ஆளுநரே பட்ட மளிப்பு விழாவைப் புறக்கணித்து விடுவாரா? அனைவரின் தலை களிலும் கருப்பு நிறத்தில் தானே முடி இருக்கிறது! நரைத்தவர்கள் கூட கருப்பு மையைத் தடவிக் கொண்டல்லவா கருப்பைக் காத்துக் கொள்கிறார்கள். இனி ஆளுநர் கலந்து கொண்டால் மொட்டை அடித்து விட்டோ அல்லது வேறு நிறத்தில் டை அடித்து விட்டோ தான் வர வேண்டும் என்பார்களோ?
காவல்துறைக்கு ஏன் இந்த வேலை? கருப்பு, கண்களில் படக் கூடாது என்றால் விழிகளில் இருக்கும் கருப்பை (கருவிழியை) என்ன செய்வார்கள்? மாண வர்களின் கோபக் கனல் வீச்சு கண்களிலேயே தெறிக்குமே, தாங்குவாரா ஆளுநர்?
பெரியார் பெயரிலான பல்கலைக் கழகத்தில் பெரியார் தந்த உடையாம் கருப்பு நிறுத்துக்குத் தடை என்றால் என்ன பொருள்? வாசலிலேயே கருப்புடையுடன் பெரியார் சிலையாக நிற்கிறாரே! அய்.அய்.டி.க்கு கொல்லைப்புற வழியாக நுழைந்த மோடி போல பல்கலைக் கழகத்திற்கும் கொல் லைப் புற வழி நுழைவாரா ஆர்.என். ரவி. இத்தகைய நிகழ்ச்சிகளில் காவல்துறையும் அதீதமாக நடந்து கொள்கிறதே, ஏன்? தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்திற் குள்ளும் கருப்புடையுடன் செல் வோரை அவ்வப்போது தடுத்தி நிறுத்தி கூடுதலாக வினவுவதாகச் செய்திகள் வருகின்றனவே! கருப்பைக் கண்டு காவி மிரளட்டும் – அது நியாயம்! காக்கிச் சட்டை மிரளுவதேன்? இன்றைய ஆட்சி யாளர்கள் கருப்பு சிகப்புக் கொடியை உயிரினும் மேலாய் உயர்த்திப் பிடிக்கும். திராவிட இயக்கத்தவர் என்பதை காவல்துறை அறியாதா? எதிர்ப்புத் தெரிவிக்க விரும்பினால் அது ஜனநாயக உரிமை. அதற்குரிய வழிமுறையில் செய்ய விரும்புவதை செய்யட்டும்! அதன்மீது காவல் துறையின் அனுமதியோ, மறுப்போ சட்டப்படியான அவர்கள் முடிவின் பாற்பட்டது. அதை ஒரு போதும் எவரும் தடை செய்ய முடியாது. ஆனால் மாணவர்கள் எந்த நிறத்தில் உடை அணிந்து வரலாம்; எந்த நிறத்தில் உடை அணிந்து வரக் கூடாது என்றெல் லாம் தடை செய்யும் வேலையை யாரைக் காக்கவோ காவல் துறை செய்வதும், பல்கலைக் கழகம் அதற்கு சுற்றறிக்கை விடுவதும் கண்டிக்கத்தக்கதாகும்.
– கருப்புச் சட்டைக்காரன்