நகைக் கடன் வாங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் கட்டுப்பாடுகள் தனக்குச் சொந்தமான நகை என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டுமாம்!

2 Min Read

புதுடில்லி, மே 22 வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங் கள் தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக 9 புதிய வரைவு விதி முறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட் டுள்ளது.

கடும் கட்டுப்பாடு

அதில் முக்கியமாக, அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75 சதவீதத்துக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது ரூ.100 மதிப்புள்ள தங்க நகையை அடகு வைக்கும்பட்சத்தில் அதிகபட்சம் ரூ.75 மட்டுமே கடனாக பெறமுடியும்.

கோவிட் சமயத்தில் பொதுமக் களின் நலன் கருதி தங்க நகை மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் பெறலாம் என தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது மறுபடியும் 75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்

அடமானம் வைக்கப்படும் தங்க நகை தங்களுடையதுதான் என்பதற்கான ஆதாரத்தை வாடிக்கையாளர் அதாவது கடன் வாங்குபவர் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தங்கத்தின் தூய்மைத் தன்மை மற்றும் தரம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்று புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி, மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்காக அடகு வைக்க செல்லும் மக்களுக்கு தங்கம் வாங்கியதற்கான ரசீதை காட்ட வேண்டும், தரச் சான்று வழங்க வேண்டும் என்று கூறுவது நடைமுறையில் ஒத்துவராத விதிமுறை. இது, கடன்பெற செல்லும் மக்களை அலைக்கழிக்கும் செயலாக அமையும் என்பது நிதித் துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.  அடகு வைக்கப்படும் தங்கம் 24 காராட்டாக இருந்தாலும் 22 காரட் மதிப்பின் அடிப்படையில்தான் இனி கணக்கிட்டு கடன் வழங்கப்படும். ஆனால், புதிய விதிமுறையின்படி வெள்ளிப்பொருட்களுக்கும் நகைக்கடன் பெறலாம்.

தனிநபர்கள் இனி ஒரு கிலோ தங்க நகை வரை மட்டுமே அடமானம் வைக்கமுடியும். நகை கடன் ஒப்பந்தங்களில் முழுமையான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.வாடிக்கையாளர் கடனை திரும்ப செலுத்திய ஏழு நாட்களில் நகையை அவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அதற்கடுத்து தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 அபராதமாக வாடிக்கையாளர்களுக்கு வங்கி வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையில் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *