புதுடில்லி, மே 22– நீதிபதி பதவிக்கான தேர்வில் பங்கேற்க 3 ஆண்டுகள் வழக்குரைஞர் பயிற்சி பெற்றிருப்பது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சிவில் நீதிபதிகள் தேர்வு
நீதித்துறை தேர்வாணை யம் நடத்தும் சிவில் நீதிபதிகள் தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள் தொடர்பாக அகில இந்திய நீதிபதிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தது.
அந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகி யோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (20.5.2025) பரபரப்பு தீர்ப்பு அளித்தது. நீதிபதி ஆவதற்கு நீதிமன்றத்தில் வாதாடிய அனுபவத் தின் முக்கியத்துவத்தை உறுதி செய்தது.
நடைமுறை சவால்கள்
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- படிப்பை முடித்தவுடன், புதிய சட்ட பட்டதாரிகளை நேரடியாக நீதிபதி பதவியில் அமர்த்தும் வழக்கம் இருந்து வருகிறது. இதனால் நடைமுறை சவால்கள் உருவாகின்றன. பல் வேறு நீதிமன்றங்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் இதை உணர்த்து கின்றன. நீதிபதி பணியை திறமை யாகவும், தகுதியுடனும் நிறைவேற் றுவதற்கு நீதிமன்றத்தில் வாதாடிய நடைமுறை பயிற்சி அவசியம்.
வழக்குரைஞர் பயிற்சி
எனவே, சிவில் நீதிபதி போன்ற ஆரம்பநிலை பணி யிடங்களுக்கு நீதித்துறைதேர் வாணையம் நடத்தும் தேர்வில் பங்கேற்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வவழக்குரைஞர் பயிற்சி பெற்றிருப்பது கட்டாயம் ஆகும். எனவே, சட்டப்படிப்பை முடித்தவுடன் நீதித் துறை தேர்வா ணையம் நடத்தும் தேர்வில் பங்கேற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.