சென்னை, மே. 21- பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரை சட்டவிரோதமாக ஆந்திர விவசாயிகள் திருடி பயன்படுத்துகின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறப்பு
பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு திறந்து விடப்படுகிறது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 5ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
வழக்கமாக கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நீர் 5 அல்லது 6 நாட்களில் தமிழ்நாடு எல்லையான ஊத்துக் கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு வந்தடையும். ஆனால் 16 நாட்கள் ஆகி யும் ஜீரோ பாயிண்ட் பகு திக்கு கிருஷ்ணா நீர் இதுவரை வந்து சேர வில்லை. கிருஷ்ணா கால் வாய் வறண்டு கிடப்பதும், ஆந்திரா விவசாயிகள் மின் மோட்டார்களை கொண்டு தண்ணீரை உறிஞ்சி சாகுபடிக்கு பயன்படுத்தி வருவதால் கிருஷ்ணா நீர் தமிழ்நாடு எல்லை வந்தடைய தாமதம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு எச்சரிக்கை
சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சி எடுக்கும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து கிருஷ்ணா கால்வாயில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுத்தால் கைது செய்வோம் என்றும், மின் மோட்டார்களை பறிமுதல் செய்வோம் என்றும் ஆந்திரா அதிகாரிகள் அங்குள்ள விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். எனினும் விவசாயிகள் தண்ணீர் திருடுவது தொடர்கிறது. குறிப்பாக சிறீகாளஹஸ்திரி பகுதியில் இருந்து சத்தியவேடு வரை சுமார் 40 கிலோமீட்டர் தூரத் துக்கு ஆந்திரா விவசாயிகள் சட்ட விரோதமாக ஆயிரத் துக்கும் மேற்பட்ட நீர் உறிஞ்சும் மின்மோட்டார் மூலம் இரவு பகலாக நீரை விவசாயத்திற்கு எடுப்பதால் கிருஷ்ணா நீர் தமிழ்நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.