தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
கால்நடை உதவி மருத்துவர் 216, சீனியர் என்டமாலசிஸ்ட் 33, அசிஸ்டென்ட் மேனேஜர் 6, உதவி இயக்குநர் (நகர், ஊரமைப்பு) 4 உட்பட மொத்தம் 330 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
வயது: பொது பிரிவினருக்கு 18 – 40, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, உட்பட 17 இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
தேர்வுக் கட்டணம்: ரூ. 100, பதிவுக்கட்டணம்: ரூ. 150
கடைசி நாள்: 11.6.2025
விவரங்களுக்கு: tnpsc.gov.in