இதுதான் ஒன்றிய பிஜேபி ஆட்சியின் சாதனை! ராகுல் காந்தி குற்றச்சாட்டு

viduthalai
2 Min Read

ஏழைகளின் பணம் பணக்காரர்களிடம் குவிகிறது!
பணக்காரர்கள் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவிக்கின்றனர்!

பெங்களூரு, மே 21- காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளின் பாக்கெட்டுக்கு பணம் வழங்கப்படுகிறது  என்றும், ஆனால் ஒன்றிய பா.ஜனதா ஆட்சியில் மக்களின் பணம் சில குறிப்பிட்ட பணக்காரர்களிடம் குவிகிறது என் றும் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச் சாட்டை கூறினார்.

கருநாடகத்தில் காங்கிரஸ் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில்  நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நிறைவ டைந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது நாங்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினோம். முக்கியமாக 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக உறுதியளித்தோம்.அப்போது பாரதீய ஜனதா வினர் இந்தத் திட்டங்களை அமல்படுத்த சாத்தியமில்லை என்று கூறினர். பிரதமர் மோடியும் இது சாத்தியமில்லை என்று கூறினார்.

வங்கிக் கணக்குகளில் வரவு

ஆனால், எங்கள் கட்சி ஆட்சி அமைந்ததும் அந்த 5 உத்தரவாதத் திட்டங்களை அமல்ப டுத்தினோம். நாங்கள் உங்களுக்கு வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கருநாடகத் தில் உள்ள ஏழை மக்களின் பாக்கெட்டுகளில் பணத்தை போடுகிறோம். இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

இந்த பணத்தை நீங்கள் கல்வி, சுகாதாரத்திற்கு பயன்படுத்துகிறீர்கள். இதை தான் நாங்கள் விரும்புகி றோம். உங்களின் பணம் மீண்டும் உங்களின் பாக்கெட்டிற்கே வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பணமும் சில குறிப்பிட்ட நபர்களுக்கு பாரதீய ஜனதா வழங்குகிறது. ஆனால், நாங்கள் அரசின் பணம் ஏழை, பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, ஆதிவாசி மக்களின் பாக்கெட்டுக்கு நேரடியாக செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.

பணக்காரர்களுக்கு…

நாங்கள் உங்களின் பாக்கெட்டில் செலுத்தும் பணம் மார்க்கெட்டிற்கு செல்கி றது. இதனால் உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த பணத்தை நீங்கள் கிராமங்களில் செலவு செய்வதால் கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கிறது.

பாரதீய ஜனதா மாடலில் நாட்டின் மொத்த பணமும் 2, 3 பணக்காரர்களிடம் குவிகிறது. இந்த பணக்காரர்கள் கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ பணத்தை செலவு செய்வது இல்லை. ஆனால் அவர்கள் இந்த பணத்தைக் கொண்டு லண் டன், நியூயார்க் உள்ளிட்ட பிற நகரங்களில் சொத்துகளை வாங்குகிறார்கள். பாரதீய ஜனதா மாடலில் மக்களின் பணம் சில குறிப்பிட்ட பணக்காரர்களுக்கு செல்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *