தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை
உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி
சென்னை, மே 21 ஒன்றிய அரசு ஒருங்கி ணைந்த கல்வித்திட்டத்தில் (சமக்ர சிக் ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கல்வி நிதி தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு பலமுறை கடிதம் எழுதியுள்ளது.
ஆனால், தேசிய கல்வி கொள்கை யின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு இந்த நிதியை ஒதுக்க முடியாது என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரி வித்தார். மேலும் ஒன்றிய அமைச்சரின் அறிவிப்பைக் கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
ஏற்புடையதல்ல!
இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு நியாயமாக தர வேண்டிய கல்வி நிதி ரூ.2,291 கோடியை உடனடியாக விடு விக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. பிஎம்சிறீ, சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாததால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்பு டைய தல்ல என்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி நிதி இல்லாததால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்களின் நலன் பாதிக்கப்படு வதாகவும் சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் ரூ.2,291 கோடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.