பரபரப்பு தகவல்கள்
அமதாபாத், மே.21- குஜ ராத்தில் 100 நாள் வேலைத் திட் டத்தில் நடந்த ரூ.71 கோடி ஊழல் தொடர்பாக மாநில அமைச்சரின் மூத்த மகன் கைதைத் தொடர்ந்து 2-ஆவது மகனும் நேற்று (19.5.2025) கைது செய்யப்பட்டார்.
ரூ.71 கோடி முறைகேடு
குஜராத்தில் ஆளும் பா.ஜனதா அரசில் பஞ்சாயத்து மற்றும் வேளாண்துறை அமைச்சராக இருப்பவர் பச்சுபாய் காபத்.இவர் தஹோட் மாவட்டத்தின் தேவ்காத் பகாரியா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
தபேஜாட் மாவட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் இருந்து 2024-ஆம் ஆண்டுவரை 100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ.71 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் 35 ஒப்பந்த நிறுவ னங்கள் அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, முடிக் காத பணிகளுக்கும். வினி யோகிக்காத பொருட்களுக்கும் அரசுப்பணத்தை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
அமைச்சர் மகன்களுக்கு தொடர்பு
இந்த ஊழல் வழக்கில் அமைச்சர் பச்சுபாய் காபத்தின் மகன்களான பல்வந்த், கிரண் ஆகியோருக்கும் சில நிறுவ னங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பச்சுபாயின் மூத்த மகன் பல்வந்தை கடந்த 17-ஆம் தேதி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவருடன் தாலுகா வளர்ச்சி அதிகாரி தர்ஷன் படேலும் கைது செய்யப் பட்டார்.
தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகள், அமைச்சர் பச்சுபாயின் இளைய மகன் கிரணையும் நேற்று கைது செய்தனர். அவருடன் தாலுகா மேனாள் வளர்ச்சி அதிகாரி, 2 துணை திட்ட அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.
அரசியலில் பரபரப்பு
இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து இருக்கிறது. அவர் களிடம் விசாரணை நடந்து வரு கிறது. 100 நாள் வேலைத்திட்ட ஊழல் வழக்கில் அமைச்சரின் 2 மகன்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப் பையும் ஏற்படுத்தி இருக்கிறது.