தோழர்களுக்கு வணக்கம். ‘Periyar Vision OTT’-இல் ‘பெரியார் பிஞ்சு’ என்றொரு சேனல் இருக்கிறது. அதில் பிஞ்சுகளுக்கான பல்வேறு காணொலிகள் ஒளிபரப்பாகின்றன என்பது மகிழ்ச்சியளிக்கிறது. சிறார் கதை விழா நிகழ்வில் தமிழினி எனும் பிஞ்சு கதை சொன்ன காணொலியும் அதில் இடம்பெற்றுள்ளது. அனைவரையும் ஈர்க்கும் வகையிலான ஒரு குட்டிக் கதையை அழகாக கூறியுள்ளார். அவருக்கு நமது பாராட்டுகள். மேலும், இதே நிகழ்வில் பலர் கூறிய கதைகளும் இடம்பெற்றுள்ளன. அனைவரும் அவற்றை அவசியம் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ‘Periyar Vision OTT’-இன் பணிகள் தொடரட்டும். பகுத்தறிவு பரவட்டும்.
– இ.கலைவாணி, செங்கல்பட்டு
Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com